News September 7, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், அரியலூரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாமில், 33 பேருக்கு மருத்துவச் சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டையை, கலெக்டர் பிரசாந்த் வழங்கினார். மேலும், 8 மாற்றுத்திறனாளிகள் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 43 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்காகப் பதிவு செய்யப்பட்டது.
Similar News
News September 8, 2025
கள்ளக்குறிச்சி: குடிநீர் பிரச்னையா…? இதை பண்ணுங்க

கள்ளக்குறிச்சி மக்களே உங்கள் பகுதிகளில் குடிநீர் பிரச்சனை தொடர்ச்சியாக இருக்கிறதா…? சரியான நேரத்தில் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறீர்களா…? யாரிடம் புகார் அளித்தும் இதறகான சரியான பதில் கிடைக்கவில்லையா…? அப்போ உடனே இந்த நம்பர் (04151-222002) க்கு கால் பண்ணி உங்க புகாரை பதிவு பண்ணுங்க உங்க பிரச்சனைக்கு கண்டிப்பா ஒரு தீர்வு குடுப்பாங்க. இந்த தகவலை நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News September 8, 2025
கள்ளக்குறிச்சி: டிராக்டர் மீது பைக் மோதி 2பேர் உயிரிழப்பு

மூங்கில்துறைப்பட்டு அருகே வடமாமந்துார் தர்கா பகுதியை சேர்ந்த ரசாக் & சையத் அப்தப் ஆகியோர் பைக்கில், நேற்று முன்தினம் இரவு, 9 மணிக்கு வட மாமந்துாரில் இருந்து மூங்கில்துறைப்பட்டு நோக்கி சென்றனர்.
அப்போது, சாலையோரம் கரும்புலோடு ஏற்றி வந்த டிராக்டர் இருந்தது, அதை அறியாமல் இருவரும் சென்ற பைக் டிராக்டர் மீது மோதியதில் இருவரும் சம்பவ இடத்துலயே உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News September 8, 2025
சிறந்த காவல் நிலையத்திற்கான கேடயம் பெற்ற எஸ்ஐ

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தேர்ந்ததடுக்கப்பட்டது. அதற்கான சான்றிதழ் மற்றும் கேடயத்தை இன்று தமிழக DGP வெங்கட்ராமன், ADGP டேவிட்சன் தேவாசீர்வாதம் வடக்கு மண்டல ஜஜி ஆஸ்ரா கர்க் ஆகியோர் முன்னிலையில் கச்சிராயபாளையம் உதவி ஆய்வாளர் ஆனந்தராஜ் பெற்று கொண்டார்.