News March 20, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து அட்டை வழங்கும் முகாம்

image

மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு 2025-2026 நிதியாண்டிற்கான இலவச பேருந்து பயண அட்டை மற்றும் புதுப்பித்து வழங்கும் இலவச பயண அட்டை வழங்கப்படவுள்ளது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் 25, 26, 27 ஆகிய 3 தினங்களிலும், உடலியக்க குறைபாடுடையோர், காதுகேளாதோர், மற்றும் மனவளர்ச்சிகுன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு 28ம் தேதியும் நடைபெற உள்ளது.*ஷேர்

Similar News

News April 15, 2025

மதுரை அரசு அலுவர்களின் தொடர்பு எண்கள்

image

மதுரையில் உள்ள முக்கிய அரசு அலுவலர்களின் தொடர்பு எண்கள்
1.மாவட்ட வருவாய் அலுவலர் – 0452-2532106
2.மாவட்ட வழங்கல் அலுவலா் -0452-2546125
3.உதவி ஆணையா் (கலால்) – 0452-2531718
4.வருவாய் கோட்டாட்சியா் -0452-2530644
5.உதவி இயக்குநா் -0452-2525099
6. தனி துணை ஆட்சியா் – 0452-2521260
உங்கள் நண்பர்ளுக்கு ஷேர் செய்யவும்

News April 15, 2025

சித்திரைத் திருவிழா பக்தர்களுக்கு கட்டண அறிவிப்பு

image

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண உற்சவத்தினை தரிசிக்க விரும்பும் பக்தர்களின் வசதிக்காக ரூ.200/- மற்றும் ரூ.500/-க்கான கட்டணச்சீட்டுகள் பெற்றவர்கள் வடக்கு கோபுரம் வழியாகவும் மற்றும் கட்டணமில்லா தரிசன முறையில் முதலில் வருபவர்களுக்கு முதலில் அனுமதி (First Come First Serve) என்ற அடிப்படையில் பக்தர்கள் கொள்ளளவிற்கேற்ப தெற்கு கோபுரம் வழியாகவும் திருக்கல்யாண உற்சவத்தை தரிசிக்க அனுமதிக்கப்படுவர்.

News April 15, 2025

அனைத்திலும் இந்தி திணிப்பு – சு. வெங்கடேசன் காட்டம்!

image

மதுரை எம்பி சு. வெங்கடேசன் இன்று (ஏப்.15) அவரது X தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி. ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் அமைச்சர்களின் பதில்கள் இந்தி. NCERT தொடங்கி எம்பிக்களுக்கு எழுதப்படும் பதில் வரை நாள்தோறும் இந்தித் திணிப்பு. இனிமேல் எடப்பாடியார் என்பதை இந்தியில்தான் நயினார் நாகேந்திரன் எழுதுவாரா? ” என கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!