News July 1, 2024
மாற்றுதிறனாளிகளுக்கு நிதியுதவி வழங்கிய ஆட்சியர்

கள்ளக்குறிச்சி ஆட்சியரகத்தில் மாவட்ட மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பில் விபத்தினால் கண்கள் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளி சுரேஷ்குமார் என்பவருக்கு ரூ.2 லட்சம் நிவாரன தொகையும்
மற்றும் இயற்கை மரணம் எய்திய மாற்றுத்திறனாளி வாரிசுகளுக்கு ரூ.17000 வீதம் நான்கு மாற்றுத்திறனாளிகளிக்கு ரூ.85000 தொகைக்கான காசோலைகளை இன்று ஆட்சியர் பிரசாந்த் வழங்கினார்.
Similar News
News August 28, 2025
கள்ளக்குறிச்சி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு குடும்ப வருமானம் ரூ.1,20,000க்கு மிகாமல் இருக்க வேண்டும். இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க. <<17539622>>தொடர்ச்சி<<>>
News August 28, 2025
இந்த திட்டத்திற்கான தகுதிகள்

இந்த திட்டத்தில் பயன்பெற குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக் கூடாது. பெற்றோரில் ஒருவர் 40 வயதிற்குள் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். மேலும், வருமானச் சான்றிதழ், பெண்குழந்தைக்கான பிறப்புச் சான்றிதழ், கருத்தடை சான்றிதழ், ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். SHARE செய்யுங்க
News August 28, 2025
கள்ளக்குறிச்சி: ஆன்லைன் மோசடியில் ரூ.41 லட்சம் இழப்பு

சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் பொன்முடி. இவர் சமூகவலைதளத்தில் வீட்டிலிருந்தே பணிபுரியலாம் என்ற விளம்பரத்தை பார்த்து பல்வேறு தவணைகளாக ரூ.41 லட்சத்து 75 ஆயிரத்தை ஆன்லைன் மூலமாக மர்ம நபர்கள் தெரிவித்த வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். கமிஷன் தொகை கிடைக்காததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், இதுகுறித்து சைபர் கிரைமில்(1930) மற்றும் ஆன்லைன் மூலமாக புகார் அளித்துள்ளார். உஷாரா இருங்க மக்களே. SHARE பண்ணுங்க