News March 21, 2024
மார்ச் 22ல் முதல்வர் பிரச்சாரம்

தமிழ்நாட்டில் ஏப்ரல் -19 நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக பெரம்பலூர் ,திருச்சி தொகுதி திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை மார்ச்-22 சிறுகனூரில் நடைபெறும் கூட்டத்தில் திமுக தலைவரும் , முதல்வருமான மு.க.ஸ்டாலின்
அறிமுகம் செய்து பரப்புரையை தொடங்குகிறார்.
பொதுக் கூட்ட திடலை இன்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Similar News
News December 27, 2025
பெரம்பலூர்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம், இன்று (26.12.2025) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி முன்னிலையில் நடைபெற்றது. இந்த குறைதீர்க்கினால் கூட்டத்தில் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
News December 26, 2025
பெரம்பலூர்: திருமண தடையா? கவலை வேண்டாம்!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூர் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மதுரகாளியம்மன் திருக்கோயில், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான மதுரகாளியம்மனுக்கு, அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!
News December 26, 2025
பெரம்பலூர்: வாக்காளர் பட்டியல் முகாம் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் SIR கணக்கெடுப்பு பணிக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டதில், பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 387 வாக்குசாவடி மையமும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 345 வாக்குசாவடி மையமும் உள்ளது. இதில் முதற்கட்டமாக டிசம்பர் 27,28 ஆகிய தினங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.


