News December 29, 2025
மார்கழி திங்கள் ஸ்பெஷல் கோலங்கள்!

யோகா போல, கோலம் போடுவதும் உடல்நலன் காக்கும் கலைதான். குனிந்து, வளைந்து, அமர்ந்து கோலம் போடுவது ஆசனம் செய்வது போல்தான் இருக்கும். அதிகாலையில் எழுந்து கோலம் போட்டால், அந்த நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும் என நம்பப்படுகிறது. அந்த வகையில், மார்கழி திங்களன்று வீட்டு வாசலில் போடக்கூடிய கோலங்களை போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். Swipe செய்து பார்த்து அவற்றை வீட்டில் முயற்சிக்கவும்.
Similar News
News December 29, 2025
ரஜினி, அஜித்தை முந்திய PR

2025-ல் அதிகம் வசூல் செய்த படங்களில் ஏஜிஎஸ், வெற்றி உள்ளிட்ட பல தியேட்டர்களில் பிரதீப் ரங்கநாதனின் ’டிராகன்’ முதலிடம் பெற்றுள்ளது. இந்தாண்டு ரஜினியின் கூலி, அஜித்தின் விடாமுயற்சி, GBU, சூர்யாவின் ரெட்ரோ, தனுஷின் குபேரா, இட்லிகடை, SK-ன் மதராஸி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் பல படங்கள் வெளியாகின. ஆனால் அதையும் தாண்டி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் PR நடித்த டிராகன் அதிகம் வசூல் செய்துள்ளது.
News December 29, 2025
கடத்தல்காரர்களின் சிம்ம சொப்பனம் இந்த பெண் சிங்கம்!

டெல்லி போலீஸ் கான்ஸ்டபிள் சீமா தாகா, கடந்த 3 மாதங்களில் காணாமல் போன 76 குழந்தைகளை மீட்டு அதிரடி காட்டியுள்ளார். இந்த ஆபரேஷனில் பல கடத்தல்காரர்கள், கொலைகாரர்களை தீரத்துடன் எதிர்கொண்டு வாகை சூடியுள்ளார். காணாமல் போன குழந்தைகளில் பெரும்பாலனவர்கள் கட்டிட தொழில் செய்யும் கூலி தொழிலாளர்களின் பிள்ளைகள். இந்த பெண் சிங்கத்தின் தீரத்தை பாராட்டி கான்ஸ்டபிளில் இருந்து ASI-ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
News December 29, 2025
IND vs NZ: டிக்கெட் விற்பனையில் முக்கிய மாற்றம்

IND அணி NZ-க்கு எதிராக 3 ODI போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில், ஜன.18-ல் இந்தூரில் நடக்கும் கடைசி போட்டிக்கான டிக்கெட் விற்பனையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. *‘District by Zomato’ தளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படும். *மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் ID கார்டுகளை சமர்ப்பிப்பது அவசியம். *வரும் 31-ம் தேதி காலை 11 மணி to ஜன.1 மாலை 5 மணி வரை டிக்கெட் விற்பனை நடைபெறும்.


