News December 9, 2025
மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ள ஆட்சியர் அழைப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2025-ம் ஆண்டிற்கான அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி வரும் டிச.,12-ம் தேதி அன்று காலை 6 மணியளவில் நடைபெற உள்ளது. அதில் 17 வயதிற்கு மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 7401703459 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 13, 2026
மயிலாடுதுறை: இரு சக்கர வாகனம் வாங்க விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு, இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தில், மானிய தொகை ரூ.25000லிருந்து ரூ. 50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பள்ளிவாசலில் பணியாற்றும் பேஷ் இமாம்கள் ஆலிம்கள் அரபி ஆசிரியர்கள், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் (13.3.2026) தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயன்பெறலாம்.
News March 13, 2026
மயிலாடுதுறை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 12) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச் 13) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 12, 2026
மயிலாடுதுறை மாவட்டத்தில் குரூப்-2 முதன்மை தேர்வு

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2a முதன்மை எழுத்து தேர்வு வருகிற 15ம் தேதி முற்பகல் கொள்குறி வகை வினாக்கள் தேர்வும், பிற்பகல் விரைந்துரைக்கும் வகையிலான எழுத்துத் தேர்வும் மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. முற்பகல் 82 நபர்களும் பிற்பகல் 83 நபர்களும் தேர்வு எழுத உள்ளனர். இந்நிலையில், தேர்வர்கள் உரிய நேரத்திற்குள் தேர்வு மையத்திற்கு வரவேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


