News February 7, 2026

மாரடைப்பு ஆபத்தை தடுக்கும் கொடுவா மீன்!

image

20 முதல் 60 வரை என பலருக்கும் சர்வசாதாரணமாக ஹார்ட் அட்டாக் வருகிறது. இதனை தடுக்க கொடுவா வகை மீன்களை சாப்பிடலாம் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த மீன்களில் அதிகமாக ஒமேகா 3, புரதம், வைட்டமின் D, B12, செலினியம் இருப்பதால் இதய பிரச்னைகள் வரும் அபாயம் குறைகிறதாம். எனவே Red Meat-க்கு பதிலாக இவ்வகை மீன்களை உண்ணலாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். கண்டிப்பா SHARE பண்ணுங்க.

Similar News

News February 9, 2026

திமுக பேச்சுவார்த்தை குழு அமைக்காதது ஏன்?

image

தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை குழு விரைவில் அமைக்கப்படும் என ஸ்டாலின் கூறியும் இன்னும் அமைக்கப்படவில்லை. இதுகுறித்து விசாரிக்கையில், இப்போதே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினால், மொத்த ஊடக கவனமும் அதை சுற்றியே திரும்பிவிடும். எனவே தேர்தல் தேதி அறிவிக்கும் வரை, இதுவரை முடிக்கப்பட்ட திட்டங்களை திறந்து வைத்து, அதனை மக்களிடம் சேர்ப்பதில் ஸ்டாலின் முழு கவனம் செலுத்தி வருகிறாராம்.

News February 9, 2026

77382 99899 உடனே இந்த நம்பருக்கு மெசேஜ் பண்ணுங்க

image

‘77382 99899’ என்ற எண்ணுக்கு மெசேஜ் செய்து, உங்களின் EPFO பேலன்ஸை அறிந்து கொள்ளலாம் தெரியுமா? EPFO-ல் பதிவு செய்யப்பட்ட போன் நம்பரில் இருந்து மேற்குறிப்பிட்ட எண்ணிற்கு, EPFOHO -> உங்களின் UAN நம்பர் -> விருப்பமான மொழி (ENG or TAM) என டைப் செய்து மெசேஜ் செய்தால், உங்களின் பேலன்ஸ் தொகை எவ்வளவு உள்ளது என மெசேஜ் வந்துவிடும். அனைவரும் அறிய வேண்டிய இந்த தகவலை அதிகளவில் SHARE பண்ணுங்க.

News February 9, 2026

ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்?

image

லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. ராகுல் காந்தியின் இல்லத்தில் இண்டியா கூட்டணி MP-க்கள் கூட்டம் நடைபெற்றது. அவையில் எதிர்க்கட்சிகளை பேச விடாமல் தடுப்பது, PM மோடியை பெண் எம்பிக்கள் தாக்க முயன்றதாக குற்றம்சாட்டியது, 8 MP-க்கள் சஸ்பெண்ட் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், திமுக MP TR பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!