News January 9, 2025
மாயனூர் கதவணைக்கு 10076 கன அடி நீர்வரத்து

மாயனூர் கதவணைக்கு இன்றைய நிலவரப்படி 10076 கனஅடி நீர் காவிரியில் வந்து கொண்டிருக்கிறது. காவிரி ஆற்றில் 9426 கன அடி நீரும், தென்கரை பாசன வாய்க்காலில் 200 கன அடி நீரும், கட்டளைமேட்டு வாய்க்காலில் 350 கன அடி நீரும், புதிய கட்டளைமேட்டு வாய்க்காலில் 100 கன அடி நீரும் விவசாயத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் கடந்த சில நாட்களாகவே தண்ணீர் வரத்து அதிகமாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 13, 2026
கரூர்: போஸ்ட் ஆபீஸ் வேலை- தேர்வு கிடையாது!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 13, 2026
கரூர்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், கரூர் மாவட்ட மக்கள் 04324225100 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News February 13, 2026
அறிவித்தார் கரூர் கலெக்டர்!

கரூரில் அனைத்து தாலுகாக்களிலும் நாளை (பிப்.14) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெறுகிறது. கரூர், அரவக்குறிச்சி உட்பட 7 வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெறும் இம்முகாமில், பெயர் திருத்தம், மொபைல் எண் பதிவு மற்றும் புதிய அட்டை கோரி விண்ணப்பிக்கலாம். பொதுமக்கள் தங்கள் பகுதி முகாம்களில் பங்கேற்று குறைகளை நிவர்த்தி செய்யுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். SHAREIT


