News November 16, 2024

மாயனூர் கதவணைக்கு இன்று 5,729 கன அடி நீர்வரத்து 

image

கரூர், மாயனூர் கதவணைக்கு இன்று காலை நிலவரப்படி 5729 கன அடி நீர் காவிரியில் வந்து கொண்டிருக்கிறது. காவிரி ஆற்றில் 4509 கன அடி நீரும், தென்கரை பாசன வாய்க்காலில் 500 கன அடி, கட்டளை மேட்டு வாய்க்காலில் 300 கன அடி, புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் 400 கன அடி நீரும் பாசனத்திற்காக திறந்து விடப்படுகிறது. அணைக்கு சில நாட்களாகவே 2000 கன அடி நீர் குறைவாக வருகிறது.

Similar News

News August 23, 2025

கரூரில் இலவச வக்கீல் சேவை வேண்டுமா..?

image

கரூர் மக்களே.., நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. அதன் மூலம் எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். ▶️கரூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04324-296570 ▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 ▶️ Toll Free 1800 4252 441 ▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 ▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 23, 2025

கரூரில் கலை கட்டப் போகும் திருவிழா!

image

கரூரில் நாளை(ஆக.24) இயற்கை வேளாண்மை திருவிழா காலை 9:00 – மாலை 6:00 வரை கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில், கண்காட்சி, சிறப்புப் பயிற்சி பட்டறை, இயற்கை உணவு செய்முறை பயிற்சி, 100க்கும் மேற்பட்ட விற்பனை அரங்குகள் முதலியவை இடம்பெறவுள்ளன. மேலும், பொதுமக்களுக்கு இலவச இயற்கை உணவு வழங்கப்படும். இதற்கு நுழைவு கட்டணம் இல்லை, என இயற்கை விவசாயிகள் சங்கத் தலைவர் கணேசன் தெரிவித்துள்ளார். (SHARE)

News August 23, 2025

கரூரில் சூரியகாந்தி விளைச்சல் அமோகம்

image

கரூர்: மைலம்பட்டி மேற்கு பகுதியில் மைலம்பட்டி, தரகம்பட்டி, சீதப்பட்டி, அய்யம்பாளையம், ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் சூரியகாந்தியை சுமார் 100 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் அதிக அளவு நடவு செய்கின்றனர். மேலும் தற்போது பெய்துள்ள மழையால் நல்ல விளைச்சலை சூரியகாந்தி கொடுத்துள்ளது என மகிழ்ச்சி வெள்ளத்தில் விவசாயிகள் வெளிப்படுத்திக் கொண்டனர்.

error: Content is protected !!