News September 7, 2025
மாயனூரில் 6மி.மீ மழைப்பதிவு

கரூர் மாவட்டம், மாயனூர் பகுதியில் நேற்று சுமார் 3மணி நேரம் (6மி.மீ) கன மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் அங்கு குளிர்ந்த ஈரப்பதம் நிலவியது. தற்போது இந்த மழையினால் அப்பகுதியில் நல்ல குளிர்ச்சியான சூழல் உருவாகி இருக்கிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News September 8, 2025
கரூரில் போலீஸ் உத்தரவை மதிக்காத டிரைவர்கள்!

கரூரில் மினி பஸ் ஸ்டாண்டிலிருந்து 30க்கும் மேற்பட்ட மினி பஸ்கள் ஸ்டாப் இல்லாத இடங்களில் நிறுத்தி செல்வதால், மனோகரா கார்னார் சிக்னல் பகுதியில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போலீசாரின் உத்தரவை மீறி மினி பஸ்களை நிறுத்தி செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என மற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News September 8, 2025
கரூரில் ரூ.5 லட்சம் காப்பீடு பெறலாம்

கரூர் மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (<
News September 7, 2025
கரூர்: மின் துறையில் SUPERVISOR வேலை! APPLY NOW

கரூர் மக்களே மத்திய அரசின் மின்சாரத் துறையில் கள பொறியாளர் & மேற்பார்வையாளர் பணிக்கு 1,543 காலியிடங்கள் உள்ளது. இதற்கு BE / B.Tech / B.Sc படித்தவர்கள் விண்ணபிக்கலாம். சம்பளமாக ரூ.23,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். <