News November 15, 2025

மாம்பழம் சின்னம்: ராமதாஸ் முக்கிய ஆலோசனை

image

மாம்பழம் சின்னம் தங்களுக்கானது என்று அன்புமணி தரப்பு ECI-க்கு கடிதம் எழுதியுள்ளது. எனவே, சட்டப் போராட்டத்தை கையிலெடுக்கும் வகையில், பாமக வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை உறுப்பினர்களுடன், ராமதாஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். கட்சி அங்கீகாரத்தை பெறுவது, மாம்பழம் சின்னம் ஆகியவற்றிற்காக SC-ஐ நாட இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News November 15, 2025

ADMK தற்போது EDMK ஆக உள்ளது: TTV

image

எம்ஜிஆர் தொடங்கிய கட்சியே தற்போது இல்லாமல் போய்விட்டதாக விமர்சித்துள்ள TTV தினகரன், ADMK தற்போது EDMK ஆக செயல்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். நாங்கள் துரோகம் செய்ததாக EPS கூறி வருகிறார், ஆனால் அவர் தான் துரோகம் செய்தவர் என்பது எல்லாருக்கும் தெரியும் என்றும் TTV தெரிவித்துள்ளார். துரோகம் என்ற வார்த்தையை சொல்லக்கூட EPS-க்கு தகுதியில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

News November 15, 2025

நட்சத்திர தம்பதிக்கு குழந்தை பிறந்தது.. ❤️❤️

image

பாலிவுட் நடிகர் ராஜ் குமார் ராவ் – நடிகை பத்ரலேகா தம்பதிக்கு இன்று குழந்தை பிறந்துள்ளது. பெண் குழந்தை பிறந்திருப்பதாக அவர்கள் அறிவித்துள்ளனர். தங்களது திருமண நாளில் குழந்தை பிறந்திருப்பதாக மகிழ்ச்சியுடன் அவர்கள் தெரிவித்துள்ளனர். 2021 நவ.15-ல் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த நட்சத்திர ஜோடிக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News November 15, 2025

கரூரில் உயிரிழந்தவர்களின் வீடுகளில் CBI

image

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக CBI தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. நேற்று (நவ.14) கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்கள் 7 பேரிடம் CBI அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து இன்று, கரூர் துயர சம்பவத்தில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரின் வீடுகளுக்கு CBI அதிகாரிகள் 3 குழுவாக பிரிந்து சென்று விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!