News January 31, 2026
மாம்பழம் சின்னம் யாருக்கு?

மாம்பழம் சின்னம் அன்புமணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக ECI அனுப்பிய கடிதத்தை ரத்து செய்யக்கோரி, ராமதாஸ் தரப்பு சென்னை HC-ல் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை பிப்ரவரி 2-ம் தேதி தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வர உள்ளது. ஏற்கனவே யாருடன் கூட்டணி என்பதை இறுதி செய்ய முடியாமல் தவித்து வரும் ராமதாஸ் தரப்பு, இந்த வழக்கின் தீர்ப்புக்காக பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.
Similar News
News February 8, 2026
சாணக்கியனாய் இருக்க வேண்டும்: விஜய பிரபாகரன்

திமுக, அதிமுக என இரு கட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படும் தேமுதிக இதுவரை கூட்டணியை இறுதி செய்யவில்லை. இந்நிலையில் சத்திரியனாய் இருப்பதை விட சாணக்கியனாய் இருக்க வேண்டும் என திருமண நிகழ்ச்சி ஒன்றில் விஜய பிரபாகரன் பேசியுள்ளார். தனக்கு MP, MLA பதவி வேண்டாம் என கூறிய அவர், தேமுதிகவிற்கு உழைத்த நிர்வாகிகள் பதவிக்கு வர வேண்டும் என்பதே தனது நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.
News February 8, 2026
அங்கன்வாடி பள்ளிகளுக்கு 1 மாதம் விடுமுறை

அங்கன்வாடி பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மே 1 முதல் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒரு மாதத்திற்கு தேவையான சத்துமாவினை கணக்கிட்டு விடுமுறைக்கு முன்பாகவே குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் எனவும் ஊழியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. கோடை விடுமுறைக்கு ரெடியாகிக்கோங்க வாண்டு பசங்களே!
News February 8, 2026
40 வயதிற்கு மேல் ஆண்கள் இதை கட்டாயம் செய்யணும்!

40 வயதிற்கு மேல், ஆண்கள் நடைபயிற்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். தினமும் 45 நிமிடங்களாவது நடைபயிற்சி செய்ய வேண்டும். இது மன அழுத்தத்தை குறைக்க, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த ஈசியான வழி. எடை குறைப்பதற்கும் நடைபயிற்சி முக்கியமானதாகும். ரத்த ஓட்டம் சீராவதால், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்களை கட்டுப்படுத்த முடியும். இனி இதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்!


