News February 1, 2025
மாமல்லபுரம் கற்களை அடுக்கி கட்டப்பட்ட ஒரே கோவில்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், பாறைகளை குடைந்து கோயில், சிற்பம் வடிப்பது பல்லவர் கால வழக்கமாக இருந்தது. ஆனால் மலை குன்றின் மீது இருக்கக்கூடிய ஒரே ஒரு சிறிய மண்டபம் மட்டும், பல்லவர் காலத்தில் பாறைகளை வெட்டி எடுத்து ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி கட்டப்பட்டுள்ளது. தற்போது பாழடைந்து இருக்கும் இந்த மண்டபத்தை சுற்றுலா பயணிகள் விரும்பி பார்த்து செல்கின்றனர். இங்கிருந்து கடற்கரையை ரசிக்கலாம்.
Similar News
News March 2, 2026
செங்கல்பட்டு: சாதனை படைத்த LKG சிறுவன்!

சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் பகுதியில் “தமிழரும், சிலம்பமும்” என்ற தலைப்பில் பாரம்பரிய கலையான சிலம்பத்தில் ஒற்றை கம்பை சுற்றி ‘நோபல் உலக சாதனை’ படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் தாம்பரம் பகுதியை சேர்ந்த LKG படிக்கும் 4 வயது சிறுவன் ஆரண் திகழ் விராட்ஜ் இடைவிடாமல் தொடர்ந்து 1 மணிநேரம் 7 நிமி டம் சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை படைத்தார்.
News March 2, 2026
செங்கல்பட்டில் கொடூரத்தின் உச்சம்

கொளத்தூரை சேர்ந்த பிரதீப்(35)- லியா(28) தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். மனைவி நடத்தியில் கொண்ட சந்தேகத்தால் இருவருக்கும் அடிக்கடி செண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் லியா தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது 2 மகள்களுடன் மாமல்லபுரம் சென்ற பிரதீப் விடுதியில் 2 மகள்களை தண்ணீரில் தலையை முக்கி கொலை செய்து தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.சிகிச்சையில் இருந்து குணமானதால் அவர் கைது செய்யப்பட்டார்.
News March 2, 2026
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று (மார்ச்.01) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


