News December 31, 2025
மாமல்லபுரத்தில் இதற்கெல்லாம் தடை!

மாமல்லபுரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஓட்டல் மற்றும் விடுதி உரிமையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஏஎஸ்பி அறிவழகன் தலைமையில் நடைபெற்றது. இதில், டிச-31 மாலை 6 மணிக்கு மேல் நீச்சல் குளங்களுக்குத் தடை, நள்ளிரவு 1 மணிக்கு மேல் கொண்டாட்டங்களுக்குத் தடை மற்றும் கடற்கரைக்குச் செல்ல அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டது. மேலும், தங்குபவர்களின் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 21, 2026
செங்கல்பட்டில் வேலைவாய்ப்பு முகாம்

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு/தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது வருகின்ற ஜன. 23 (வெள்ளிக்கிழமை) காலை 9.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை நடைபெற உள்ளது. மேலும் முகாம் தொடர்பான விவரங்களுக்கு 044-27426020 /9499055895 / 9486870577 / 9384499848 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சினேகா தெரிவித்துள்ளார்.
News January 21, 2026
செங்கை:இ-சேவை மையத்திற்கு NO.. இனி ஒரு CLICK போதும்!

செங்கை மக்களே, உங்களுக்கு தேவையான
1.சாதி சான்றிதழ்
2.வருமான சான்றிதழ்
3.முதல் பட்டதாரி சான்றிதழ்
4.கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
5.விவசாய வருமான சான்றிதழ்
6.சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
7.குடியிருப்புச் சான்றிதழ்
மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த லிங்கில் <
News January 21, 2026
கதிகலங்கும் வண்டலூர் பூங்கா

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 23 வயது வெள்ளைப்புலி ‘அனு’ மற்றும் 22 வயது சிறுத்தை ‘ரமேஷ்’ ஆகியவை வயது மூப்பு காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்தன. ஏற்கனவே சில நாட்களுக்கு முன் 1 பெண் சிங்கம் உயிரிழந்த நிலையில், ஒரே வாரத்தில் 3விலங்குகள் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த வெள்ளைப்புலியை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்துப் பராமரித்தது குறிப்பிடத்தக்கது.


