News January 19, 2026
மாமல்லன் நீர்த்தேக்கத்தால் 170 மில்லியன் லிட்டர் நீர்: CM

திமுக ஆட்சியில் 43 அணைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் இந்த உண்மை தெரிந்தும் திமுக குறித்து பலர் பொய் சொல்வதாக CM ஸ்டாலின் பேசியுள்ளார். திருப்போரூரில் மாமல்லன் நீர்த்தேக்கத்திற்கு அடிக்கல் நாட்டி பேசிய அவர், சென்னை மாநகரின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு மாமல்லன் நீர்த்தேக்கம் அமைய உள்ளது என்றும், இதனால் நாள் ஒன்றுக்கு 170 மில்லியன் லிட்டர் நீரை மக்களுக்கு வழங்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 23, 2026
தங்கம், வெள்ளி.. விலை ₹15,000 குறைந்தது

காலையில் கிடுகிடுவென உயர்ந்த <<18935296>>தங்கம்<<>>, வெள்ளி விலைகள், மாலையில் மளமளவென சரிந்துள்ளன. வெள்ளி கிலோவுக்கு காலையில் ₹20,000 அதிகரித்து அதிர்ச்சி கொடுத்தது. ஆனால், மாலையில் மகிழ்ச்சியளிக்கும் விதமாக கிலோவுக்கு ₹15,000 குறைந்திருக்கிறது. சென்னையில் தற்போது வெள்ளி 1 கிராம் ₹345-க்கும், 1 கிலோ ₹3.45 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
News January 23, 2026
ஷாக்கைக் குறைங்க முதல்வரே: நயினார்

சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுவதைப் போல, வெற்றித் தலைவன் மோடி வருவதற்கு முன்னே வழக்கம் போல, வெற்றுப் புலம்பல் ஒலி தொடங்கி இருக்கிறது என்று ஸ்டாலினுக்கு நயினார் பதிலடி கொடுத்துள்ளார். உங்களது அத்தனைப் போலிக் குற்றச்சாட்டுகளுக்கும் இந்த ஒரு புகைப்படமே (மேலே 2-வது போட்டோ) பதில். அதை பார்த்தபின், ஷாக்கைக் குறைத்து புரட்டுகளை பரப்புவதை நிறுத்துங்கள் என விமர்சித்துள்ளார்.
News January 23, 2026
PM மோடியின் கூட்டத்தில் கவனத்தை ஈர்த்த சிறுமி!

மதுராந்தகத்தில் நடைபெற்ற NDA பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் சிறுமி ஒருவரின் ஓவியம் PM மோடியின் கவனத்தை ஈர்த்தது. மேடையில் இருந்தவாறே சிறுமியின் கையிலிருந்த ஓவியத்தை கவனித்த அவர், தனது தாயாரின் ஓவியத்தை கையில் வைத்துள்ள சிறுமியின் பெயர், முகவரியை கேட்டுப் பெறுமாறு தனது உதவியாளருக்கு அறிவுறுத்தினார். தான் டெல்லி சென்ற பிறகு அந்த சிறுமிக்கு கடிதம் எழுதுவதாகவும் கூறியதால் அங்கு கரகோஷம் எழுந்தது.


