News January 11, 2025

மாமனாரை கத்தியால் குத்தி கொன்ற மருமகன்

image

திருப்பணிகரிசகுளத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து(60), இவரது மருமகன் சுடலைமுத்து. கடந்த 29ம் தேதி சுடலைமுத்துக்கும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் மகள், மருமகன் ஆகியோரை சமரசப்படுத்த இசக்கிமுத்து வந்தார், அப்போது ஆத்திரமடைந்த சுடலைமுத்து தனது மாமனாரை கத்தியால் குத்தினார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இசக்கிமுத்து நேற்று உயிரிழந்தார். பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 28, 2026

நெல்லை: வங்கி வேலை.. ரூ. 48,000 சம்பளம்!

image

யூகோ வங்கியில் (UCO Bank) காலியாக உள்ள Generalist and Specialist Officers பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 173
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.48,480 – 93,960/-
5. கல்வி தகுதி: B.E/B.Tech, MBA, CA, M.Sc, MCA
6. கடைசி தேதி: 02.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News January 28, 2026

நெல்லை: EC, பட்டா, சிட்டா, பத்திர நகல் – எல்லாம் WhatsApp-ல்

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.

1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!

News January 28, 2026

திருநெல்வேலி: ஆட்டோ மோதியதில் வாலிபர் பலி

image

நெல்லை மாவட்டம் விகே புரம் வடக்கு கார் தெருவை சேர்ந்தவர் பரமசிவன் இவர் மகன் பேச்சி சொர்ணராஜ். இவர் தனது நண்பர் கார்த்திக் என்பவருடன் நேற்று விக்கிரமசிங்கபுரத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லோடு ஆட்டோ மோதி இருவரும் படுகாயமடைந்தனர். இருவரையும் மீட்டு பாளை அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் பேச்சி சொர்ணாராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

error: Content is protected !!