News March 30, 2025
மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

மதுரை செவென் ஹில்ஸ் அரிமா சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் வரும் சனிக்கிழமை 5.4.2025 அன்று காலை 9 மணி முதல் 2.30 மணி வரை காளையார்கோவில் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற உள்ளது. இம்முகாமை கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் துவங்கி வைக்கிறார்.
Similar News
News February 9, 2026
சிவகங்கை: 2 நாட்கள் குடிநீர் நிறுத்தம்

சிவகங்கை மாவட்டம், தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து வரும் நீருந்து பிரதான குழாய்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், நாளை செவ்வாய்கிழமை (10.2.2026) மற்றும் புதன்கிழமை (11.2.2026) ஆகிய இரண்டு தினங்கள் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் வழங்க இயலாது என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.
News February 9, 2026
சிவகங்கை: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு

சிவகங்கை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <
News February 9, 2026
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 28,007 பேர் விண்ணப்பம்

சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் கீழ் பெயர் சேர்க்க 28,007 பேர் விண்ணப்பித்துள்ளனர் என மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான பொற்கொடி தெரிவித்தார். பெயர் நீக்கம் 2,221, திருத்தம் 24,346, வெளிநாடு வாழ் வாக்காளர்கள் 17 என மொத்தம் 54,591 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.17 அன்று வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.


