News August 5, 2025
மானிய விலையில் நெல் விதை விற்பனை!

காரைக்கால் வேளாண்துறை மூலம் பயிர் உற்பத்தி திட்டத்தின் கீழ், நெல் விதை CR1009, IR 20, BPT 5204, KKLR- 2, DRR DHAN 58 ஆகிய ரகங்கள் பொது பிரிவு விவசாயிகளுக்கு ஒரு கிலோ விதை ரூ10/- க்கும் அட்டவணை பிரிவு விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்தில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குனர் கணேசன் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதை நெல் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
Similar News
News August 4, 2025
புதுவையில் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் !

புதுவையில் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் !
➡️திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்
➡️புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில்
➡️திருவேட்டக்குடி சுந்தரேசுவரர் கோயில்
➡️திருத்தெளிச்சேரி பார்வதீசுவரர் கோயில்
➡️தருமபுரம் யாழ்மூரிநாதர் கோயில்
➡️திருவண்டார்கோயில் பஞ்சனதீசுவரர் கோயில்
➡️வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோயில்
இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE செய்யுங்க !
News August 4, 2025
புதுச்சேரியில் ஆப் மூலம் மோசடி; போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் நேற்று செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளனர். அதில் சைபர் குற்றவாளிகள் பாகிஸ்தான், சீனா, கம்போடியா போன்ற நாடுகளிலிருந்து வாட்ஸ் ஆப் மூலம் மிரட்டுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் கடன் செயலி மூலம் கடன் பெற வேண்டாம். மேலும், சமூக வலைத்தளங்களில் வரும் போலியான உடனடி கடன் செயலி விளம்பரங்களை நம்பி பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.
News August 4, 2025
புதுவை மாநில சின்னத்தின் வரலாறு தெரியுமா ?

புதுவைக்கு வருகை தந்த மன்னர் கிருஷ்ணதேவராயர் விலைமாது ஆயியின் வீட்டைக் கோயில் என நினைத்து வணங்கினார். பின்னர், விவரம் அறிந்தபின் கோபம் கொண்டார். இதற்கு மன்னிப்பு கேட்ட பெண் ஆயி தனது வீட்டை இடித்து குளம் வெட்டினார். 18ஆம் நூற்றாண்டில் புதுவையில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவியபோது அந்த குளத்தில் இருந்து கால்வாய் வெட்டி பஞ்சத்தை போக்கினார். இதன் நினைவாக அந்த பெண்ணிற்கு மண்டபம் நிறுவப்பட்டது. பகிரவும்