News June 27, 2024

மானியத்தில் மண்புழு உரம் – வேளாண் துறை

image

தேனி மாவட்ட விவசாயிகள் இயற்கை உரங்களான மண்புழு உரங்களை பயன்படுத்த வேளாண் துறை மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 50% மானியத்தில் மண்புழு உரங்கள் தயாரிப்பதற்கு மண்புழு உர தயாரிப்பு படுக்கை வேளாண் துறை மூலம் வழங்கப்பட உள்ளது. உர தயாரிப்பு படுக்கை வாங்க விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி, அல்லது அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளலாம் என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 8, 2025

தேனியில் ஒருவர் தீக்குளித்து தற்கொலை

image

தேவதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (65). இவர் நேற்று முன்தினம் குடிபோதையில் பொது இடத்தில் தகராறு செய்துள்ளார். இதனை அறிந்த அவரது மகன் முத்துப்பாண்டி, பழனிச்சாமியை கண்டித்து வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இதனால் வேதனை அடைந்த பழனிச்சாமி வீட்டில் யாரும் இல்லாத பொழுது தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு (நவ.7) செய்து விசாரணை.

News November 8, 2025

தேனி: பட்டாவில் பெயர் மாற்ற ஒரே வழி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.in <<>>என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News November 8, 2025

தேனியில் 78 காலி பணியிடங்கள் – கலெக்டர் தகவல்

image

தேனி மாவட்டத்தில் 78 காலி பணியிடங்கள் 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. https://theni.nic.in என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம். ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனை, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகம், க.விலக்கு, தேனி- 625512 என்ற முகவரிக்கு 24.11.2025 அன்று மாலை 5 மணிக்குள் நேரிலோ/அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என்றார்.

error: Content is protected !!