News April 15, 2025
மானாம்பள்ளி மலையேற்றம் நாளை முதல் தொடக்கம்

கோயம்புத்தூரில் நாளை முதல் ‘டிரெக் தமிழ்நாடு’ மலையேற்ற சுற்றுலா திட்டத்தின் கீழ், மலையேற்றம் செல்ல அனுமதிக்கப்படுகிறது. முதல்கட்டமாக வால்பாறை, மானாம்பள்ளி வழித்தடம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. வனத்துறையின் இணையதளமான https://trektamilnadu.com இல் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆறு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் அனுமதி உண்டு. கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News April 16, 2025
ஜிப்லிக்கு நோ சொல்லுங்க; சைபர் கிரைம் எச்சரிக்கை!

கோவை மக்களே, ஜிப்லி(Ghibli) புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதில் நீங்கள் பதிவேற்றம் செய்யும் புகைப்படங்களை டீப் ஃபேக் (Deep fake) தொழில்நுட்பத்தில் பயன்படுத்தி தவறாக சித்தரிக்கப்படும் அபாயம் உள்ளதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சைபர் க்ரைம் குற்றங்களுக்கு 1930 என்ற எண்ணை அழைக்கவும். இதை ஷேர் பண்ணுங்க! உங்க நண்பர்களும் Ghibli ஆபத்தை தெரிஞ்சுக்கட்டும்.
News April 16, 2025
சமூக ஆர்வலர்களுக்கு பாராட்டு விழா

கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நீர் பாதுகாப்பில் சிறப்பாக செயல்படுபவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட
உள்ளது. நீர் பாதுகாப்பில் செயல்படுபவர்களின் விவரங்கள் மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மையத்திற்கு அனுப்புமாறு என்றார்
News April 16, 2025
கோவை; ‘நோ’ சொன்னவரை கொன்றவனுக்கு ஆயுள் தண்டனை

கோவை எஸ்.சி.எஸ்.டி நீதிமன்றம் ஓரினச் சேர்க்கைக்கு மறுத்த ஒருவரைக் கொலை செய்த குற்றவாளிக்கு நேற்று ஆயுள் தண்டனை விதித்தது. திருநெல்வேலியைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இடையர்பாளையத்தை சேர்ந்த மணிஜோசப் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி விவேகானந்தன், மணி ஜோசப்புக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.