News October 14, 2025

மானாமதுரை, காரைக்குடி வழியாக மும்பை எக்ஸ்பிரஸ்

image

மதுரை ரெயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் செங்கோட்டை-மயிலாடுதுறை ரயில் அக்-16, 17, 18 மற்றும் 22ம் தேதிகளில் செங்கோட்டையில் இருந்து காலை 6.55 மணிக்கு புறப்பட்டு மானாமதுரை, காரைக்குடி, வழியாக இயக்கப்படும். அதுபோல நாகர்கோவில் – மும்பை எக்ஸ்பிரஸ் அக்-23 மற்றும் 26ம் தேதிகளில் மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்பட உள்ளன என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Similar News

News October 14, 2025

சிவகங்கை: 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

image

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சிவகங்கை, மதுரை, ராம்நாடு, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சிவகங்கையில் இன்று (அக் 14) முதல் அக். 18 (சனி) வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளது. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

News October 14, 2025

மானாமதுரை அடையாளம் தெரியாத நபர் விபத்தில் பலி

image

மானாமதுரை – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீ தர்ம முனிஸ்வரர் கோயில் அருகில் நேற்று இரவு 11 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் TN63BM5965 டூவீலரில் சென்றபோது விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 14, 2025

சிவகங்கை: ஊராட்சி வேலை.. APPLY செய்வது எப்படி?

image

சிவகங்கை கிராம ஊராட்சி செயலர் பணிக்கு 51 காலியிடங்கள் உள்ளன. கல்வி தகுதி : 10th படித்தால் போதுமானது. கடைசி தேதி- நவ.9. முதலில் <>www.tnrd.tn.gov.in<<>> என்ற தளத்தில் APPLYஐ கிளிக் செய்து பெயர் உள்ளிட்ட விவரங்கள், கல்வி சான்று, வகுப்பு சான்று, புகைப்படம், கையொப்பம் ஆகியவற்றை பதிவேற்றி சமர்ப்பிக்க வேண்டும். சொந்த ஊரில் அரசு வேலை உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!