News October 2, 2024
மானாமதுரை அருகே 520 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

சிவகங்கை-மானாமதுரை புறவழிச்சாலையில் ரேசன் அரிசி கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், சிவகங்கை சி.எஸ்.சி.ஐ.டி பிரிவு அருகே TATA 207 வாகனத்தை போலீசார் சோதனை செய்ததில், 13 மூட்டைகளில் 520 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. உடனடியாக அந்த மூட்டைகளை பறிமுதல் செய்து, சிவகங்கையை சேர்ந்த மதுபாலன்(30), மதுரையைச் சேர்ந்த சூர்யா(22) ஆகியோரை கைது செய்தனர்.
Similar News
News August 18, 2025
சிவகங்கை: டிகிரி இருந்தால் LIC-யில் வேலை ரெடி!

சிவகங்கை இளைஞர்களே, மத்திய அரசின் LIC நிறுவனத்தில் உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் ஆகிய பணியிடங்களுக்கு 841 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க <
News August 18, 2025
காரைக்குடி, மானாமதுரை வழியாக சிறப்பு ரயில்

எதிர் வரும் வேளாங்கண்ணி திருவிழாவிற்காக சிறப்பு ரயில் காரைக்குடி- மானாமதுரை வழியாக (ரயில் எண் 06061) ஆக.28, செப்.3,10 ஆகிய தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கும், (ரயில் எண்- 06062) வேளாங்கண்ணியிலிருந்து – எர்ணாகுளத்திற்கு ஆக.29, செப்-4,11 ஆகிய தேதிகளிலும் இயங்க உள்ளது. சிவகங்கை மாவட்ட ரயில்வே பயணிகள் இதை பயன்படுத்திக் கொள்ளவும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
News August 18, 2025
சிவகங்கை: டிகிரி முடித்தால் ரூ.64,000 த்தில் வங்கி வேலை..!

இந்தியன் ரெப்கோ வங்கியில், கிளார்க் பணிக்கு 30 க்கும் மேற்பட்ட காலி இடங்கள் உள்ளன. இப்பணிக்கு மாத சம்பளமாக ரூ.24,050 முதல் 64,480 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள், 18.08.2025 முதல் 08.09.2025 க்குள் <