News February 23, 2026

மானாமதுரையில் களமிறங்குகிறாரா JP?

image

NDA கூட்டணியில் தமமுகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து இன்னும் பேச்சுவார்த்தை துவங்கவில்லை என்று ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளர். பேச்சுவார்த்தைக்கு பிறகு எந்தெந்த தொகுதிகள் என்பது முடிவாகும். அதில், மானாமதுரையும் ஒரு தொகுதியாக இருக்கலாம். மக்கள் விருப்பப்பட்டால் தான் கூட அங்கு போட்டியிடலாம் என்று சூசகமாக கூறியுள்ளார். இதனால், அவர் தென்மாவட்டத்தில் களமிறங்குவது உறுதியாகியுள்ளது.

Similar News

News February 24, 2026

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அற்புத கசாயம்

image

➤தேவை: வெற்றிலை, கற்பூரவல்லி இலை, கண்டந்திப்பிலி, மல்லி விதைகள், சீரகம், மிளகு, திராட்சை, மஞ்சள் தூள், சுக்குப்பொடி, வெற்றிலை ➤உலர் திராட்சையை நீரில் ஊறவைக்கவும். வெற்றிலை, கற்பூரவல்லி தனியா, மிளகு, கண்டந்திப்பிலி ஆகியவற்றை நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு, சீரகம், மஞ்சள் தூள், சுக்குப்பொடியுடன் திராட்சையை சேர்த்து மசித்து கொள்ளவும். இதனை வடிகட்டி, தேன் கலந்து குடிக்கலாம். SHARE IT.​

News February 24, 2026

மாணவர்களிடையே சாதிய வெறிக்கு யார் பொறுப்பு? EPS

image

தூத்துக்குடி, முதலூரில் 11-ம் வகுப்பு மாணவன் மீது சக மாணவர்கள் சாதிவெறி கொலைவெறி தாக்குதல் நடத்திய செய்தி அதிர்ச்சியளிப்பதாக EPS தெரிவித்துள்ளார். இச்சம்பவம் நடந்து 4 நாள்களாகியும் இதுவரை வழக்கு பதியவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், மாணவர்களிடையே சாதிய வெறி வளர்ந்து நிற்பதற்கு யார் பொறுப்பு? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே, இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

News February 24, 2026

அதிமுகவில் இணைந்த ஆதரவாளர்கள்.. OPS அதிர்ச்சி

image

OPS-ன் கோட்டையான தேனியில் அவரது ஆதரவாளர்கள் சுமார் 400 பேர் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளனர். ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், OPS-ன் தீவிர ஆதரவாளரான செயற்கை சந்திரன் தலைமையில் இணைந்த இணைப்பு நடைபெற்றுள்ளது. அதேபோல், நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த மகளிரணி, மாணவரணி, அம்மா பேரவை மாவட்ட துணை செயலாளர்கள் அதிமுகவில் இணைந்துள்ளது OPS-க்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

error: Content is protected !!