News March 12, 2025
மாநில பட்ஜெட்டை அதிமுக வரவேற்கிறது – அன்பழகன்

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன், இன்றைய பட்ஜெட் உரையின் மீது, “அரசு சார்பு நிறுவனங்களின் மூலதன சொத்துக்களை உருவாக்க 300 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. பட்ஜெட், அரசின் நிதியுதவியை பெற்று பயன்பெறும் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு வாழ்க்கை தரத்தை உயர்த்தும். ஒருசில குறைகள் இருந்தாலும் அதிமுக இந்த பட்ஜெட்டை வரவேற்கிறது” என்று தெரிவித்தார்.
Similar News
News April 20, 2025
செல்வம் பெருக இவரை வணங்குங்கள்

படைத்தால், காத்தல், அழித்தல் என மூன்றும் செய்வதால் இவருக்கு பைரவர் என அழைக்கப்படுகிறார். பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், பாவத்தை போக்குவர் என்று பொருள். அனைத்து சிவாலாயங்களிலும் வழிபாடு சூரியனிடமிருந்து ஆரம்பித்து அர்த்தசாமப் பூஜையாக பைரவருடன் முடிவடையும். தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபட்டால் செல்வம் பெருகும், கடன் நீங்கும், தோஷம் நீங்கும் மற்றும் பல நன்மைகள் கிடைக்கும். இதை SHARE செய்யவும்
News April 20, 2025
புதுச்சேரி: மின்சாரம் குறித்து புகார் அளிக்க சிறப்பு எண்

புதுச்சேரி மின்சாரத் துறை, மக்களிடம் இருந்து புகார் அளிக்கும் முறைகளை எளிதாக்கி, மின்சாரம் தொடர்பான பிரச்சினைகளை விரைவாக தீர்த்து வருகிறது. அதன்படி புதுவைக்கு – 04132334277, காரைக்காலுக்கு – 04368 222 428 என்ற எண்களை தொடர்பு கொண்டு மின்சாரம் தொடர்பான புகார்களை பதிவு செய்யலாம் அல்லது மின்சாரத் துறை இணையதளம் http://electricity.py.gov.in மூலம் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். இந்த தகவலை SHARE செய்யவும்
News April 20, 2025
இந்தியா ராணுவத்தில் இணைய ஒரு வாய்ப்பு

அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் பல்வேறு பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிறப்ப உள்ளன. இதற்கு பதிவு செய்வதற்காக, காரைக்காலைச் சேர்ந்த இளைஞர்களுக்கு 21.04.2025 அன்று அறிஞர் அண்ணா அரசு கல்லூரியிலும், புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு 22.04.2025 அன்று தாகூர் கலைக் கல்லூரியிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதை வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.