News May 24, 2024

மாநில இளைஞர் விருது விண்ணப்பம் வரவேற்பு

image

முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற 15 முதல் 35 வயது உட்பட்ட தகுதி வாய்ந்த இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.in.gov.in என்ற இணையதளம் மூலமாக 31/05/2024அன்று மாலை4.00 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்த இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.

Similar News

News March 7, 2026

பாலக்கோட்டில் உதிக்குமா சூரியன்?

image

5 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய தருமபுரி மாவட்டத்தில், பாலக்கோடு தொகுதி அரசியல் கவனம் பெற்றுள்ளது. அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் இத்தொகுதியில், EX அமைச்சர் கே. பி. அன்பழகன் 2001 முதல் தொகுதியை தன்வசப்படுத்தி வருகிறார். இந்த முறை அதிமுக-பாமக(அன்புமணி) கைகோர்த்திருக்கும் சூழலில், திமுக கூட்டணியும் தொகுதியை கைப்பற்ற முயற்சித்து வருவதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

News March 7, 2026

தருமபுரி: கழுத்தை அறுத்து படுகொலை

image

பாலக்கோடு: தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டை அடுத்த ஜெல்திம்மனுாரை சேர்ந்தவர் பாக்யராஜ், 35; இவரது மனைவி நிவேதிதா, 32. நிவேதிதாவின் நடத்தையில், பாக்யராஜுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 2 நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் கத்தியால் நிவேதிதாவின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த பாக்யராஜ் போலீசில் சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்த நிலையில், இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News March 7, 2026

தருமபுரி: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரங்கள்

image

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.06), இரவு முதல் இன்று (மார்ச்.07) காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேரத்தில் பொதுமக்கள் அவசர கால உதவி எண் 100, அல்லது இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்த தகவலை மற்றவர்களிடம் ஷேர் செய்யவும்.

error: Content is protected !!