News November 9, 2025

மாநில அளவில் முதலிடம் பிடித்த மதுரை காவல் நிலையம்

image

தமிழகத்தில் தொலைந்து போன செல்போன்களை விரைவாக செயல்பட்டு பதிவு செய்து அதை மீட்டுக் கொடுத்து, மாநில அளவில் சிறப்பாக செயல்பட்டு முதலிடம் பிடித்த மதுரை உசிலம்பட்டி காவல் நிலையத்திற்கு, சைபர் கிரைம் பிரிவு கூடுதல் ஏடிஜிபி சந்தீப் மித்தல், இந்திய அரசு சார்பில் வழங்கப்படும் ‘DOT-CEIR’ என்ற சிறந்த விருதை வழங்கினார். இதனை மதுரை சைபர் க்ரைம் எஸ்ஐ விஜயபாஸ்கர், உசிலம்பட்டி தலைமை காவலர் ராம்குமார் பெற்றனர்.

Similar News

News November 9, 2025

மதுரை பெண்களை இந்த நம்பர் -ஐ SAVE பண்ணுங்க

image

மதுரை: குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள், வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை பெற 181 என்ற பெண்கள் உதவி எண்ணை தொடர்புகொள்ளலாம் என மதுரை மாநகர் காவல்துறை அறிவித்துள்ளது. பெண்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைக்காக இந்த உதவி எண் 24 மணி நேரமும் செயல்படுகிறது. அவசரநேரங்களில் 83000-21100 என்ற எண்ணிலும் தொடர்புகொண்டு உதவி பெறலாம். SHARE!

News November 9, 2025

மதுரை : 12th PASS – ஆ…? அரசு வேலை ரெடி!

image

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயுள்ளது
1. வகை: தமிழக அரசு
2. காலியிடங்கள்: 1429
3. கல்வித் தகுதி: 12th, + 2 ஆண்டு சுகாதார பணியாளர் படிப்பு சான்றிதழ்
4.சம்பளம்.ரூ.ரூ.19,500 – ரூ.71,900
5. கடைசி நாள்: 16.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK <<>>செய்க.
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 9, 2025

மதுரை: நவ.11 இங்கெல்லாம் மின்தடை

image

11.11.2025 (செவ்வாய்கிழமை) காலை 09.00 முதல் மாலை 05.00 மணி வரை, அவனியாபுரம் துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவிருப்பதால் கீழ்காணும் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது. மண்டேலா நகர், பாப்பாகுடி, அவனியாபுரம் பஸ்டாண்ட் மார்க்கெட், திருப்பரங்குன்றம் ரோடு, பாம்பன் நகர், வெள்ளக்கல், பர்மாகாலனி, சின்ன உடைப்பு, விமானநிலையம் ஆகிய பகுதிகளில் மின் தடை.

error: Content is protected !!