News August 31, 2025

மாநில அளவிலான தடகள விளையாட்டு போட்டி தேர்வு

image

மாநில அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்க வீரர்களைத் தேர்வு செய்யும் நிகழ்வு, வருகிற செப்டம்பர் 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று திருப்பத்தூர் மாவட்டம் சோலையார்பேட்டை சிறு விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. 14, 16, 18, மற்றும் 20 வயதுக்குட்பட்ட ஆண், பெண் விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் 9787447826, 9443966011 ஆகிய எண்களில் பதிவு செய்துகொள்ளலாம்.

Similar News

News September 3, 2025

திருப்பத்தூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், மாபெரும் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை மேளா (PMNAM) நடைபெற உள்ளது. வரும் செப்.8 காலை 9 – 4 மணி வரை, வாணியம்பாடியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு தொழிற்பழகுநர் பயிற்சி வழங்க உள்ளனர். ஷேர் IT

News September 3, 2025

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (செப்.3) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ள இடங்கள்

▶️ கோடியூர், ஜோலார்பேட்டை
▶️ கல்லுக்குட்டை புதூர், திருப்பத்தூர்
▶️ சந்திராபுரம், ஜோலார்பேட்டை
▶️ பேராம்பட்டு, கந்திலி
▶️ ராமநாயக்கன் பேட்டை, நாட்றம்பள்ளி
▶️ கைலாசகிரி
பொதுமக்கள் நேரில் சென்று மனு அளித்து பயன்பெறலாம்

News September 2, 2025

சாலை பாதுகாப்பு சட்ட ஒழுங்கு ஆய்வு கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (செப்.02) சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான மாதந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்

error: Content is protected !!