News June 1, 2024
மாநில அளவிலான ஐவர் கால்பந்து ஆட்ட போட்டி

பரமக்குடி அருகே எமனேஸ்வரத்தில் வில்லேஜ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் இன்று 6ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் ஐவர் கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில் சிறப்பு விருந்தினராக இந்திய கால்பந்தாட்ட வீரர் சிவசக்தி நாராயணன் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழகம் முழுவதுமிருந்து 32 அணிகள் கலந்துகொண்டன. பின் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Similar News
News August 20, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (ஆகஸ்ட் 20) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
News August 20, 2025
ராம்நாடு: மீனவர்களுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 7 மீனவர்களை ஜூலை.13 அன்று இலங்கை கடற்படை கைது செய்தனர். இந்த வழக்கு 4-வது முறையாக இன்று ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் வழக்கை விசாரித்த நீதிபதி 7 மீனவர்களில் படகு ஓட்டுனர் யார் என்பது விசாரணையில் தெரியவராதால் மீனவர்கள் 7 பேருக்கும் செப்.3 வரை நீதிமன்றக் காவல் நீட்டித்து உத்தரவிட்டார்.
News August 20, 2025
வீடியோ ஒளிப்பதிவு பயிற்சி பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு

ராம்நாடு ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழ்நாடு வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் சார்பில் வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாகவும், 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தலும் அவசியம். மேலும் விவரங்களுக்கு www.tahdco.com என்ற இணையதளத்தை அணுகலாம்.