News March 6, 2026

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட பாமக தலைவர் மனு தாக்கல்

image

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (மார்ச் 05), அதிமுக கூட்டணி சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட பாமகவுக்கு ஒரு சீட்டு ஒதுக்கப்பட்டுள்ளது.இதில், பாமக சார்பில் போட்டியிட,பாமக தலைவர் அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வில், அதிமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News

News March 10, 2026

BREAKING: சென்னையில் சிலிண்டர் தட்டுப்பாடு

image

வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் காரணமாக உலக அளவில் கேஸ் சிலிண்டர் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் வணிக சிலிண்டர் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே எரிபொருள் விநியோகம் தொடர்பாக சென்னை ஓட்டல்கள் சங்கம் சார்பில் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

News March 10, 2026

சென்னை: டிகிரி இருக்கா…மாதம் ரூ.50,000!

image

சென்னை மக்களே.., IDBI வங்கியில் காலியாக உள்ள 1300 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பாதிக்கலாம். விண்ணப்பிக்க மார்ச் 19ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவும்.

News March 10, 2026

சென்னையில் கூண்டோடு கட்சி தாவல்!

image

சென்னை, OPS ஆதரவாளரான கொளத்தூர் டி.கிருஷ்ணமூர்த்தி கடந்த வாரம் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். இந்த நிலையில் நேற்று கொளத்தூர், வில்லிவாக்கம், ராயபுரம், திரு.வி.க.நகர், ஆர்.கே.நகர், பெரம்பூர் பகுதிகளைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்டோர், இவரது தலைமையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியை நேரில் சந்தித்து, கட்சியில் இணைந்தனர்.

error: Content is protected !!