News November 22, 2024

மாநாட்டிற்கு நிலம் வழங்கியவர்களுக்கு விருந்து

image

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டிற்கு நிலங்கள் கொடுத்த விவசாயிகளுக்கு நாளை (நவ.23) காலை 10.00 மணியளவில் சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் விருந்து அளிக்கப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலும் கட்சி நிர்வாகிகளுக்கு நாளை அனுமதி இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. 

Similar News

News September 3, 2025

சென்னையில் இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 3) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 3, 2025

சென்னையில் புதிய மெட்ரோ பாதை!

image

சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் வரையிலான மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற உள்ளது. இதற்கு முதற்கட்ட பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ரூ.1963.63 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. 13 ரயில் நிலையங்களுடன் சுமார் 15 கி.மீ-க்கு மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைய உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது.

News September 3, 2025

சென்னையில் இனி உங்களுக்கு அலைச்சலே இல்லை!

image

சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கான அரசு சேவைகளை பெற நீங்கள் அலுவலகம் செல்ல வேண்டாம். பிறப்பு சான்றிதழ் பதிவிறக்கம், கடை வாடகை செலுத்துவது, செல்லப்பிராணிகளை பதிவு செய்வது, சொத்து வரி செலுத்துவது, தொழில் வரி செலுத்துவது, சமூக நல கூடங்களை புக் செய்வது, இறப்பு சான்றிதழ், மாநகராட்சி சார்ந்து புகார் செய்வது உள்பட 34 சேவைகளை <>இந்த லிங்கில்<<>> கிளிக் செய்து பெற்றுக்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!