News October 26, 2024

மாநாட்டிற்கு திண்பண்டங்கள் தயாரிக்கும் பணி தீவிரம்

image

தவெக மாநாட்டில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மாநாட்டிற்கு வருபவர்களுக்கு திண்பண்டங்களை தயார் செய்யும் பணி மாநாட்டு திடல் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. பயோ பிளாஸ்டிக் பையில் 3 லட்சம் பேருக்கு திண்பண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன.

Similar News

News January 25, 2026

நாளை குடியரசு தினம்: ஏற்பாடுகள் தீவிரம்

image

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியிலுள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட விளையாட்டரங்க மைதானத்தில் திங்கள்கிழமை (ஜன.26) காலை 8.05 மணிக்கு ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தேசியக் கொடியேற்றுகிறாா். இதைத் தொடா்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதற்கான முன்னேற்பாடு கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

News January 25, 2026

விழுப்புரம்: மயிலம் அருகே கோர விபத்து!

image

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே கன்னிகாபுரம் பகுதியில், நேற்று (ஜன. 24) சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர், வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின், மோதிய வாகனம் நிற்காமல் சென்ற நிலையில், மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியானவர் யார் மற்றும் விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 25, 2026

விழுப்புரம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு ALERT!

image

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் கிழக்கு திசை வளிமண்டல அலை தற்போது நிலவுகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட பகுதிகளில் இன்று (ஜன.25) மிக கன மழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்ட பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியே செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்!

error: Content is protected !!