News October 4, 2025

மாநகர காவல் துறை முக்கிய வேண்டுகோள்

image

திருநெல்வேலி மாநகர காவல் துறை சார்பில் பொது மக்களின் அவ்வப்போது தங்களது இணையதள பக்கத்தின் மூலம் விழிப்புணர்வு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இன்று அக்டோபர் 4 சனிக்கிழமை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில் பள்ளி கல்லூரி மற்றும் மருத்துவமனை பகுதிகளில் வாகனங்களை மிதமான வேகத்தில் பாதுகாப்பாக இயக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இதற்கான வரைபடமும் பதிவிட்டுள்ளனர்.

Similar News

News October 5, 2025

மாவட்டத்தில் இரவு காவல் பணி அதிகாரி விபரம்

image

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (அக். 4) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News October 4, 2025

BREAKING: நெல்லை கடையடைப்பு போராட்டம் அறிவிப்பு

image

நெல்லை மாநகருக்குள் கனரக வாகனங்கள் வந்து செல்லும் நேரம் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலி மாநகர வியாபாரிகள் சங்கம் அக்டோபர் 7ம் தேதி கடையடைப்பு போராட்டம் அறிவித்துள்ளது. இரவு 10 மணி முதல் காலை 8 மணி வரையிலும் பிற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை மட்டுமே என தெரிவிக்கபட்டுள்ளது.

News October 4, 2025

நெல்லை: தாயுமானவர் திட்டம் விநியோக தேதி அறிவிப்பு

image

நெல்லை மாவட்டத்தில் அக்டோபர் மாதத்திற்கான வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் வருகிற 5 மற்றும் 6ம் தேதிகளில் செயல்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார். 70 வயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் வீட்டிற்கு சென்று குடிமை பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

error: Content is protected !!