News May 5, 2024

மாநகர காவல் துறையினருக்கு மன அழுத்த விழிப்புணர்வு

image

காவல்துறை ஆளிநர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க ஏற்படுத்த பட்ட ‘மகிழ்ச்சி ‘ திட்டத்தின் முதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று மதுரை கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாநகர காவல் துறை தலைவர் லோகநாதன் தலைமை வகிக்க, போக்குவரத்து துணை ஆணையர் குமார், மனநல மருத்துவர் Dr. ராமசுப்ரமணியன் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Similar News

News February 10, 2026

மதுரை: Whatsapp மூலம் கரண்ட் கட்-க்கு தீர்வு!

image

மதுரை மக்களே, மழை நேரங்களில் அடிக்கடி வீட்டில் கரண்ட் கட் ஏற்படுகிறதா? வோல்டேஜ் பிரச்னையா? EB ஆபீஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 9445850811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 9498794987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பwண்ணி உதவுங்க.

News February 10, 2026

FLASH மதுரையில் ரூ.150 கோடி மோசடி; பகீர் தகவல்!

image

அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் முன்னாள் உதவியாளர் ஜெய் பாலாஜி, ரியல் எஸ்டேட் என்ற பெயரில் பொதுமக்களிடம் பணம் பெற்று ரூ.150 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். ‘மருதம்’, ‘மதுரம்’ நிறுவனங்கள் மூலம் வீட்டு மனைகள் வழங்காமல் ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ளது. மேலும் தொடர்புடைய அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 10, 2026

மதுரை: செல்லூரில் ஒருவர் வெட்டிக் கொலை

image

மதுரை, செல்லூரை சேர்ந்த செல்லத்துரை (49), திருட்டு மற்றும் தகராறு வழக்குகளில் ஜாமீனில் வெளிவந்து காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். இந்நிலையில், நேற்று இரவு செல்லூர் ஜீவா ரோடு பகுதியில் மர்ம கும்பலால் அவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து செல்லூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!