News April 13, 2025

மாநகர காவல் ஆணையர் தலைமையில் ஸ்பெஷல் ஆப்பரேஷன்

image

தமிழக காவல்துறை இயக்குனர் அறிவுறுத்தலின் படி தமிழகம் முழுவதும் வார இறுதி நாட்களில் ஸ்பெஷல் ஆப்ரேஷன் என்ற நடவடிக்கையில் அதிரடி வாகன சோதனைகளை செய்ய அறிவுறுத்தியதின்படி, இன்று இரவு மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில், திருச்சி மாநகரில் மிக முக்கிய 38 சந்திப்புகளில் காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் திடீர் ஸ்பெஷல் கார்ப்பரேஷன் செய்து வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Similar News

News April 15, 2025

திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

image

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு இன்று (ஏப்.15) திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும் அதனை ஈடுசெய்யும் வகையில் வரும் மே.3 ஆம் தேதி வேலைநாளாக செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனை SHARE பண்ணுங்க..

News April 14, 2025

திருச்சி: நாளை வண்ணத்துப்பூச்சி பூங்கா செயல்படும் 

image

திருச்சி மாவட்ட வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் ஸ்ரீரங்கம் மேலூர் பகுதியில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் வேண்டுகோளுக்கிணங்க நாளை (15.04.25) சமயபுரம் தேர் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு பூங்கா திறக்கப்படும் என மாவட்ட வன அலுவலர் கிருத்திகா தெரிவித்துள்ளார்.

News April 14, 2025

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் கட்டண தரிசனம் ரத்து

image

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்ட விழா  நாளை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிராபார்க்கப்படுகிறது. இந்நிலையில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் வரும் ஏப்.14,15 ஆகிய 2 நாட்களுக்கு ரூ.100 கட்டண தரிசனத்தை ரத்து செய்து அனைவருக்கும் இலவச தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

error: Content is protected !!