News September 24, 2025
மாநகரில் இரவு காவல் பணி அதிகாரி விபரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (ஜூலை 23) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம், காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News September 24, 2025
நெல்லை ரயில்வே கேட் இன்று மூடல்

திருநெல்வேலி வாஞ்சி மணியாச்சி இடையே உள்ள ரயில்வே வழி தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக கங்கைகொண்டான் அருகே புளியம்பட்டி ரயில்வே கேட் இன்று செப்டம்பர் 24 பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்பட்டிருக்கும். எனவே இந்த பாதையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் செல்ல ரயில்வே அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தகவலை தெரியபடுத்த SHARE பண்ணுங்க..
News September 24, 2025
நெல்லை காசு மாற்று தரத்தில் பின்னடைவு

இந்திய அளவில் காற்று மாசு குறைவாக உள்ள சிறந்த நகரங்களில் நெல்லை முக்கிய இடம் பிடித்திருந்தது. காற்று மாசு தரம் 46 என்ற சிறந்த குறியீட்டு எண் நிலையில் இருந்து. தற்போது 60 ஆக பதிவாகியுள்ளது. இது சிறிய பின்னடைவாக கருதப்படுகிறது. ராமையன்பட்டி குப்பை கிடங்கு தீ விபத்தால் ஏற்படும் புகை மண்டலம், மற்றும் பாதாள சாக்கடை குழி தோண்டுவதால் சாலைகளில் பறக்கும் தூசி காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது.
News September 24, 2025
எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்திற்கான எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 26ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. எனவே எரிவாயு நுகர்வோர் குறைகள் ஏதும் இருந்தால் கூட்டத்தில் பங்கேற்று தெரிவிக்கலாம்.