News November 19, 2024
மாநகராட்சி கூட்டத்துக்குகு முன்பே கையெழுத்து
காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில், மாதந்தோறும் மாநகராட்சி வளர்ச்சி குறித்து கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நவம்பர் மாதத்திற்கான கூட்டம் இன்று நடைபெற இருக்கும் நிலையில், மேயரின் ஆதரவாளர்கள் என்பதால் 51ஆவது வார்டு கவுன்சிலர் சங்கர், 44ஆவது வார்டு கவுன்சிலர் விஸ்வநாதன் ஆகியோர் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாகவே வருகை பதிவு கையெழுத்திட்டு உள்ளதாக பிற கவுன்சிலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Similar News
News November 19, 2024
விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் தேதி அறிவிப்பு
காஞ்சிபுரத்தில் நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வரும் 22ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளதாக கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். கலெக்டர் வளாக கூட்டரங்கில் நடைபெறும் இக்கூட்டத்தில், வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். எனவே, காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என கலெக்டர் தெரிவித்தார்.
News November 19, 2024
அழிந்து வரும் மரங்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 36.8 சதுர கி.மீ. மட்டுமே வனத்துறை உள்ளது. வருவாய் தரும் பனை மற்றும் ஈச்ச மரங்களை, ஏரிக்கரையோரத்தில் இருந்து வேருடன் வெட்டி, பிற மாநிலங்களுக்கு கடத்திச் செல்வது அதிகரித்துள்ளது. இந்தாண்டு, 10 மாதங்களில் மட்டும் 20,200 மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எனவே, வனத்துறையினர் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.
News November 19, 2024
நடைபயிற்சிக்கு முற்றிலும் தடை
காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில், காலை 5:30 – 9:30 மற்றும் மாலை 5:00 – 8:00 மணி வரை, தினமும் 300க்கும் மேற்பட்டோர் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில், மைதானத்தில் வீராங்கனையரின் நலன் கருதி நடைபயிற்சி மேற்கொள்ள முற்றிலும் தடைவிதித்து விளையாட்டு துறை அதிகாரிகள் பேனர் வைத்துள்ளனர். இதனால் நடைபயிற்சிக்கு வருவோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?