News April 22, 2025

மாநகராட்சி ஒப்பந்த புள்ளியில் முறையீடு என பாஜக புகார்

image

தூத்துக்குடி மாநகராட்சியில் பல்வேறு பணிகளுக்கு ஏப்.4 அன்று ஒப்பந்த புள்ளிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு இறுதி ஏப்.25 என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒப்பந்த தேதி திறக்கப்படுவதற்கு முன்பே மாநகராட்சியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே இதில் முறைகேடுகள் நடத்து உள்ளதாக பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சித்ராங்கதன் இன்று மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

Similar News

News February 25, 2026

நாளை மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல்

image

தூத்துக்குடி மாநகராட்சியின் பட்ஜெட் தாக்கல் செய்யும் கூட்டம் நாளை (பிப்.26) காலை மாநகராட்சி கூட்ட அரங்கில் வைத்து மேயர் ஜெகன் தலைமையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் 2026 – 27 ஆம் ஆண்டுக்கான உத்தேச பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. மேலும், குடிநீர் கல்வி போன்றவைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதிகளுக்கு ஒப்புதலும் இந்த கூட்டத்தில் பெறப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

News February 25, 2026

BIG BREAKING: தூத்துக்குடி மண்ணின் மைந்தன் காலமானார்

image

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்த சுதந்திர போராட்ட வீரரும், கம்யூ;கட்சியின் மூத்த தலைவருமான ஆர். நல்லகண்ணு (101) சென்னையில் காலமானார். பிப்.1ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மூச்சுத்திணறல் & நுரையீரல் தொற்றால் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றார். சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.

News February 25, 2026

வேலையில்லா இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் சார்பில் ஏற்றுமதி வாய்ப்புகள் மற்றும் தொழில் தொடங்கும் நடைமுறைகள் குறித்து மூன்று நாட்கள் பயிற்சி வரும் 28ஆம் தேதி புதுகிராமத்தில் உள்ள பயிற்சி மையத்தில் நடைபெறுகிறது. இந்த பயிற்சியில் கலந்து கொள்ள 18 முதல் 65 வயது வரை உள்ள பத்தாம் வகுப்பு முதல் டிகிரி படித்த இருபாலரும் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!