News December 7, 2024

மாநகராட்சி உதவி ஆணையர் சஸ்பெண்ட்

image

ஊட்டி நகராட்சி ஆணையராக இருந்த ஜகாங்கீர் பாஷா சமீபத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கினார். அவரிடம் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் குறுகிய நாளில் அவர் மீண்டும் நெல்லை மாநகராட்சி உதவி ஆணையராக நியமிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜகாங்கிர் பாஷாவை இன்று பணியிடை நீக்கம் செய்து நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News April 6, 2026

நெல்லை: What’s App ல் இலவச வக்கீல் சேவை

image

நெல்லை மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News April 6, 2026

நெல்லை: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, 2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500, 3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, 5.முதியோருக்கான அவசர உதவி -1253, 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, 7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!

News April 6, 2026

நெல்லை அருகே பரிதாப பலி

image

பாவூர்சத்திரம் காமராஜ் நகர் வடக்கு பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (78), மரவேலை செய்து வந்தார். இவர் நேற்று (ஏப்.05) தனது சைக்கிளில் கீழப்பாவூரில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி அருகே சென்று கொண்டிருந்த போது மேலப்பாவூர் ஊரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ராம்குமார் (19) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திடீரென மோதியது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சோமசுந்தரம் பரிதாபமாக உயரிழந்தார்.

error: Content is protected !!