News June 16, 2024
மாநகராட்சி அங்க புதிய அலுவலர்கள் தேர்வு

திருச்சி மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு புதிய நிர்வாகிகளின் தேர்தல் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது .அனைத்து மாநகராட்சி பணியாளர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சீதாராமன் கலந்து கொண்டார். தேர்தல் நடத்தும் அலுவலர் சண்முகம் மற்றும் தேர்தல் அலுவலரான சரவணன் முன்னிலையில் நடந்தது. தேர்தலில் கூட்டமைப்பின் தலைவராக தாமோதரன் நியமிக்கப்பட்டார்.
Similar News
News March 1, 2026
திருச்சி: டிப்ளமோ முடித்தவர்களுக்கு அரசு வேலை!

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) காலியாக உள்ள 2551 செவிலியர் அதிகாரி (Nursing Officer) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2551
3. சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800
4. கல்வித் தகுதி: B.Sc Nursing, DGNM
5. வயது வரம்பு: 18-30 (SC/ ST-35, OBC-33)
6. கடைசி தேதி: 11.03.2026
7.விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற இதனை SHARE பண்ணுங்க.
News March 1, 2026
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேலைவாய்ப்பு

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்.ஐ டி), டெக்னிக்கல் உதவியாளர், இளநிலை பொறியாளர், நூலகம் மற்றும் தகவல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியுடைய நபர்கள் www.nitt.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, வரும் மார்ச் 25-ம் தேதிக்குள், “The Register, NIT, Trichy – 620015” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News March 1, 2026
திருச்சி: +2 பொதுத்தேர்வு எழுதவுள்ள 31,215 பேர்

தமிழகம் முழுவதும் +2 பொதுத்தேர்வு நாளை (மார்ச் 2) தொடங்க உள்ளது. இத்தேர்வினை திருச்சி மாவட்டத்தில் 134 தேர்வு மையங்களில், 258 பள்ளிகளைச் சேர்ந்த 14,731 மாணவர்கள், 16,484 மாணவிகள் என மொத்தம் 31,215 பேர் எழுத உள்ளனர். மேலும் தனித்தேர்வர்களாக 510 ஆண்கள், 457 பெண்கள் என 967 பேர் எழுத உள்ளனர். தேர்வு நல்ல முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய 260 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


