News August 12, 2024

மாநகராட்சியாக உதயமாகும் புதுக்கோட்டை

image

தமிழகத்தில் புதிதாக மேலும் 4 மாநகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டு, அதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக புதுக்கோட்டை மாவட்டத்தை மாநகராட்சியாக அறிவிக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி துணை ஆணையர் நாராயணன், புதுக்கோட்டை மாநகராட்சியின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 7, 2026

புதுகை மாவட்டத்தில் 101 பேர் வேட்பு மனு தாக்கல்

image

புதுவை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதியில், வரும் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இறுதி நாளான நேற்று (ஏப்ரல் 6) புதுக்கோட்டை 22 பேர், கந்தர்வகோட்டை 12 பேர், விராலிமலை 17 பேர், திருமயம் 20 பேர், ஆலங்குடி 15 பேர், அறந்தாங்கி 15 பேர், என ஆறு தொகுதிகள் 101 வேட்பாளர்கள் வேட்பு முடிவு செய்தனர். இவர்களை தவிர மாற்று வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

News April 7, 2026

புதுகை: தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி

image

பட்டுக்கோட்டையிலிருந்து திருவோணத்திற்கு நேற்று அருள்பாண்டி (33) என்பவர் பைக்கில் சென்றுள்ளார். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி அடுத்த காட்டாத்தியில், சாலையோரம் உள்ள வீட்டின் சுற்றுச்சுவரில் பைக்மோதியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தாய் பாப்பாயி அளித்த புகாரில் கரம்பக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 7, 2026

புதுக்கோட்டை: தேர் திருவிழாவில் உயிரிழப்பு

image

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தேருக்கு பின்னால் வேலை பார்த்துக் கொண்டிருந்த தாகினிபட்டியைச் சேர்ந்த மணிவண்ணன், தேரின் பின் பகுதியில் கீழே குனிந்து நிமிர்ந்த போது தேரில் இருந்த கூர்மையான பகுதி அவரின் தலையில் இடித்துள்ளது. இதையடுத்து அதிக அளவில் ரத்தம் வெளியேறி நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

error: Content is protected !!