News October 18, 2024
மாநகரப் பேருந்துகளில் பொது போக்குவரத்து டிக்கெட் வசதி

சென்னையில் மாநகரப் பேருந்து, மெட்ரோ ரயில், மின்சார ரயில் என அனைத்துப் பொதுப் போக்குவரத்து வாகனங்களிலும் பயணம் செய்ய என் சி எம் சி (National Common Mobility Card) என்ற ஒற்றை பயண அட்டையைப் பயன்படுத்தும் வசதியை அமல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை விரைவில் அமல்படுத்தப்படும் என போக்குவரத்து துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 9, 2025
அர்ச்சகர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் அர்ச்சகர் பயிற்சிக்கான ஓராண்டு சான்றிதழ் படிப்பிற்காக மாணவர்கள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பவர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும், 14 வயதுப் நிரம்பியவர்களாகவும், 24 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை கோவில் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
News July 9, 2025
சென்னையில் விருப்ப எண்கள் வாங்க அரிய வாய்ப்பு

பிஎஸ்என்எல் சென்னை வட்ட வாடிக்கையாளர்களுக்கான விருப்ப செல்போன் எண்கள் (பேன்சி நம்பர்) ஜூலை 13 வரை மின் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன. அதன்படி ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் கைப்பேசி எண்ணாக பேன்சி எண்களை பெற www.eauction.bsnl.co.in என்ற இணையதளத்தை பார்வையிடவும் என பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
News July 9, 2025
விரைவு ரயிலில் முன்பதிவில்லா பெட்டிகள் அதிகரிப்பு

முன்பதிவு இல்லாத பயணியரின் தேவையை கருத்தில் கொண்டு, விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் கூடுதலாக இணைத்து இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மேலும், நான்கு விரைவு ரயில்களில் தற்போதுள்ள 2 முன்பதிவு இல்லாத பெட்டிகளை 4ஆக அதிகரித்து இயக்கப்பட உள்ளது. எழும்பூர் – சேலம் விரைவு ரயிலில் இருமார்க்கத்திலும், வரும் செப்., 6ம் தேதி முதல் முன்பதிவு இல்லாத பெட்டிகள் நான்காக அதிகரித்து இயக்கப்படும்.