News December 25, 2025
மாதுளை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

பழங்களில் உள்ள ஊட்டச்சத்துகள், உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. குறிப்பாக மாதுளை பழத்தில் உள்ள விட்டமின் சி,கே உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அந்தவகையில், தினமும் ஒரு மாதுளை ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
Similar News
News January 28, 2026
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடக்கம்

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஏப்ரல் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஜனாதிபதி திரௌபதி முர்மு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் இன்று உரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து பிப்., 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பின்னர் 2 முதல் 4-ம் தேதி வரை ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடத்தப்படுகிறது. முன்னதாக நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.
News January 28, 2026
தைப்பூசம்: இந்த ஒரு நாள் விரதமே போதும்

சூரபத்மனை அழிக்க பார்வதிதேவி, முருகப்பெருமானுக்கு ஞானவேலை வழங்கிய நாளே தைப்பூசம் ஆகும். வரும் பிப்ரவரி 1-ம் தேதி இந்நாள் கொண்டாடப்படுகிறது. இதற்காக, அனைத்து பக்தர்களும் 48 நாள்கள் விரதம் இருந்து முருகனை வழிபட வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. தைப்பூச நாள் அன்று ஒருநாள் மட்டும் மனத் தூய்மையுடனும், முழு பக்தியுடனும் வழிபட்டாலே, முருகனின் முழு அருள் கிடைக்கும் என்பதே தைப்பூசத்தின் மைய கருத்து.
News January 28, 2026
தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இதுவரை இல்லாத வகையில் 1 அவுன்ஸ்(28g) $5,000-ஐ கடந்துவிட்டது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் $87.45 (இந்திய மதிப்பில் ₹7,994.58) உயர்ந்து $5,171.84-க்கு விற்பனையாகிறது. ஆனால், வெள்ளி $2.35 குறைந்து $113.19 ஆக உள்ளது. இதனால், இன்று இந்திய சந்தையில் தங்கம் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளது. சர்வதேச சந்தையில் கடந்த 30 நாள்களில் மட்டும் $680 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


