News October 22, 2025
மாதாந்திர விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

திருவள்ளூர் கலெக்டர் கூட்ட அரங்கில் அக்.31-ம் தேதி மாதாந்திர விவசாயிகள் நலம் காக்கும் கூட்டம் காலை 10 மணி அளவில் நடைபெறவுள்ளது. இதில் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு மனுக்கள் மூலமாக தங்களது கோரிக்கைகளை அளித்து பயன்பெறலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
Similar News
News October 22, 2025
திருவள்ளூர்: இன்றைய ரோந்து காவலர்களின் விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் (22.10.2025) இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்கள், காவல் நிலையம் வாரியாக பொதுமக்களுக்கு எளிய தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் எந்தவொரு அவசர நிலையும், குற்றச் சம்பவங்களையும் நேரடியாக தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இது மாவட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில் செய்யப்பட்டது
News October 22, 2025
திருவள்ளூர் கலெக்டர் ஆய்வு

வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இம்மழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவார்பாடி ரயில்வே சரங்கப்பாதை அருகே மழைநீர் வெளியேற்றும் பணிகள் இன்று (அக். 22) நடைபெற்றது. இப்பணிகள் குறித்து கலெக்டர் பிரதாப் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
News October 22, 2025
திருவள்ளூர் மாவட்டத்திற்கு ‘RED ALERT’

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் தேவையின்றி வெளியே செல்லாமல் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.