News January 20, 2026
மாதம் ₹2,000.. தமிழக அரசு அறிவிப்பு

‘அன்புக்கரங்கள்’ திட்டம் மூலம் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் TN அரசு ₹2,000 வழங்குகிறது. 18 வயது நிறைவடையும் வரை தொகை வழங்கப்படுவதோடு, உயர்கல்விக்கும் அரசு உதவி செய்யும். பெற்றோர் ஒருவர் இறந்து மற்றொரு பெற்றோர் நோய்களுடன் வாழ்ந்தாலோ (அ) மற்றொரு பெற்றோர் மாற்றுத்திறனாளியாக இருந்தாலோ கூட இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். தாலுகா ஆபீஸை அணுகுங்கள். SHARE.
Similar News
News February 5, 2026
தவெகவுடன் கூட்டணி அமைக்கும் சசிகலா?

அதிமுகவில் சசிகலாவை இணைக்க வாய்ப்பே இல்லை என EPS கூறிவிட்டார். இந்நிலையில், சசிகலா தனது ஆதரவாளர்களை கொண்டு தனிக் கட்சி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிக விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. எதிர்வரும் பேரவை தேர்தலில் விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவும் சசிகலா திட்டமிட்டிருப்பதாகவும் பேசப்படுகிறது.
News February 5, 2026
பெயரை மாற்றினால் சாதிய பாகுபாடு மறையுமா? மதுரை HC

மக்களின் மனதில் உள்ள சாதியப் பாகுபாட்டை மாற்ற முயல வேண்டும் என மதுரை HC தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கில், தெருக்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குவதால் மாற்றம் கொண்டுவர முடியாது என்றும் கூறியுள்ளது. இதற்கு அரசு தரப்பில் மாற்றம் கொண்டு வருவதற்காகவே, முதற்கட்டமாக பெயர்களை மாற்றும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மக்களின் மனதில் மாற்றம் வரும் என தெரிவிக்கப்பட்டது.
News February 5, 2026
அரசு கல்லூரிகளில் 426 பணியிடங்கள்.. Apply பண்ணுங்க

TN-ல் உள்ள அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 426 கெளரவ விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி, நேர்முகத் தேர்வு மதிப்பீடுகளின் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ள நபர்கள் <


