News August 31, 2025
மாதம் ரூ.14,000 உதவித்தொகைவுடன் இலவச பயிற்சி

தாம்பரம் குரோம்பேட்டை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் ஓராண்டு ஐ.டி.ஐ. தொழில்பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். மெக்கானிக், டீசல் மெக்கானிக், எலக்ட்ரீசியன், ஃபிட்டர், வெல்டர் பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி காலத்தில் மாதம் ரூ.14,000 உதவித்தொகை வழங்கப்படும். நேர்முகத் தேர்வு செப்.10 காலை 10 மணிக்கு குரோம்பேட்டை தொழிற்பயிற்சி பள்ளியில் நடைபெறும்.
Similar News
News September 1, 2025
சிறுதாவூர் பள்ளிக்கு 2.26 கோடி ரூபாய் ஒதுக்கீடு

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள சிறுதாவூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். போதிய இடவசதி, வகுப்பறைகள், கழிப்பறை மற்றும் விளையாட்டு மைதானம் இல்லாததால் மாணவர்கள் சிரமப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் ஆய்வின் பேரில், புதிய கட்டிடம் கட்ட ரூ.2.26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
News September 1, 2025
செங்கல்பட்டு: சொந்த வீடு வேண்டுமா? விண்ணப்பிக்கவும்

செங்கல்பட்டு, ராஜகுளிப்பேட்டையில் 116 வீடுகளை குலுக்கல் முறையில் பெற விண்ணப்பிக்கலாம் என வீட்டுவசதி வாரியம் அறிவித்துள்ளது. இதில், 698 முதல் 1,127 சதுர அடி வரை, வெவ்வேறு அளவுகளில் வீடுகள் விற்பனைக்கு தயாராக உள்ளன. இந்த வீடுகளின் விலைகள் ரூ. 39.58 லட்சம் முதல் இருக்கும். இதனை குலுக்கல் முறையில் பெற, வரும் செப்டம்பர் 9ம் தேதிக்குள் <
News September 1, 2025
செங்கல்பட்டு மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (செப். 2) “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற உள்ளது. அச்சாப்பாக்கம் வட்டாரத்தில், காட்டுக்கரணை கிராம ஊராட்சியில் உள்ள நூலக கட்டிடத்தில் முகாம் நடைபெறும். திருப்போரூர் வட்டாரத்தில், மாம்பாக்கம் ஊராட்சியில் உள்ள கணேஷ் மகாலில் முகாம் நடைபெறுகிறது. பொதுமக்களின் கோரிக்கைகள் பெறப்பட்டு தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.