News November 4, 2025
மாதம்பட்டி ரங்கராஜ் கைதா?… பரபரப்பு தகவல்

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவை 2-வதாக திருமணம் செய்து கொண்டதாகவும், அவரது குழந்தைக்கு அப்பா தான்தான் என்றும் <<18195589>>மாதம்பட்டி ரங்கராஜ்<<>> ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து, மாதம்பட்டி ரங்கராஜ் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவில் முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே இன்னொரு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். இதனால், மாதம்பட்டி கைது செய்யப்படலாம்.
Similar News
News November 4, 2025
வாணியம்பாடி பகுதியில் ஆட்சியர் வீடு வீடாக சென்று ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட நியூ டவுன் பகுதியில் (இன்று நவ.04) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் தொடர்பாக படிவம் வழங்கப்பட்டது. அலுவலர்கள் மூலம் கணக்கெடுப்பு படிவம் வீடு வீடாக சென்று வழங்குவதை நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்தர வல்லி பார்வையிட்டார். அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
News November 4, 2025
மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: EPS

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 31 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசிடம், EPS வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின்பும் இந்நிலை தொடர்வதாக கூறிய அவர், இலங்கை அரசை தொடர்பு கொண்டு, பிரச்னைக்கு தீர்வுகாண மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு உரிய உதவிகளை வழங்க திமுக அரசையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News November 4, 2025
FLASH: தங்கம் விலை மளமளவென குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) தங்கம் $54 குறைந்து $3,948-க்கு விற்பனையாகி வருகிறது. இது இந்திய சந்தையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 22 கேரட் தங்கம் இன்று சவரனுக்கு ₹800 குறைந்த நிலையில், நாளையும் கணிசமாக விலை குறையலாம். SHARE IT


