News November 6, 2025
மாணவி மீது விமர்சனம்: கொதித்தெழுந்த பேரரசு

கோவையில் ஆண் நண்பருடன் வெளியே சென்ற கல்லூரி மாணவி மூவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதனிடையே, அப்பெண்ணின் நடத்தையை விமர்சிக்கும் வகையில் சிலர் பேசியது சர்ச்சையானது. இந்நிலையில் உங்கள் பெண்ணுக்கு இதுபோன்று நடந்தால் இப்படி பேசுவீர்களா என இயக்குநர் பேரரசு ஆக்ரோஷத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். பெண் தனியாக சென்றால் பாலியல் வன்கொடுமை செய்வீர்களா என்றும் கேட்டுள்ளார்.
Similar News
News February 2, 2026
ஒரு கார் ரெஜிஸ்டரேஷன் நம்பருக்கு ₹2.08 கோடி!

ஆந்திராவை சேர்ந்த கிரண் என்பவர், ‘DDC 0001’ என்ற வாகன எண்ணை ₹2.08 கோடிக்கு வாங்கியுள்ளார். Big Boy Toyz Auction House நடத்திய ஏலத்தில் வாங்கப்பட்ட இந்த எண்தான், நாட்டின் மிக விலையுயர்ந்த வாகன எண். இதற்கு முன், DL 1C 0001 என்ற எண் ₹1.5 கோடிக்கு ஏலம் போனதே ரெக்கார்டாக இருந்தது. அதிக விலைக்கு கார், பைக் வாங்கலாம்; யாராவது நம்பரை வாங்குவாங்களா என நெட்டிசன்கள் விமர்சிக்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
News February 2, 2026
விஜய் ஊழல்வாதி தானே? திண்டுக்கல் சீனிவாசன்

பொது எதிரி என பாஜகவை கூறும் விஜய், அக்கட்சியை விமர்சிக்காதது ஏன் என திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுகவை ஊழல் கட்சி என விமர்சிக்கும் விஜய் ஊழல்வாதி தானே, அவர் சம்பாதித்தது கருப்பு பணமா, வெள்ளை பணமா என சாடினார். மேலும், ஆதவ் அர்ஜுனா நேர்மையான வழியில் சம்பாதித்தாரா என்றும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து சிறை சென்றவர் தானே செங்கோட்டையன் எனவும் விமர்சித்துள்ளார்.
News February 2, 2026
PM KISAN திட்டத்தின் நிதி ₹10,000?.. CLARITY

PM KISAN திட்டத்தின் கீழ், நலிவடைந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக மத்திய அரசு ₹6,000 வழங்கி வருகிறது. இந்த தொகையை ₹10,000 ஆக உயர்த்துமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், இதுதொடர்பாக பட்ஜெட்டில் அறிவிப்பு இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட நிலையில், அப்படி எதுவும் இடம்பெறவில்லை. இத்திட்டத்தின் 22-வது தவணைத் தொகை (₹6,000) இந்த வாரத்திற்குள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.


