News August 11, 2024

மாணவியை சந்தித்து ஆறுதல் கூறிய எம்எல்ஏ

image

விழுப்புரம் மாவட்டம் கக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த சன்மதி(14) பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று இரவு மின்னல் தாக்கி மாணவியின் கண் பார்வை மங்கிய நிலையில், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த தகவலறிந்து விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா நேரில் சென்று அந்த மாணவியை பார்த்து இன்று (ஆகஸ்ட் 11) ஆறுதல் கூறினார்.

Similar News

News August 27, 2025

விழுப்புரத்தில் உள்ள தமிழ்நாட்டின் முதல் விநாயகர்!

image

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே உள்ள ஆலகிராமத்தில் உள்ள விநாயகர் சிற்பம், தமிழ்நாட்டின் முதல் விநாயகர் சிற்பமாகத் திகழ்கிறது. சுமார் 1500 ஆண்டுகள் பழமையான இச்சிற்பத்தில் வட்டெழுத்துக் கல்வெட்டு உள்ளது. அறிஞர்களின் ஆய்வில், இது கி.பி. 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும், பல்லவர் காலத்திற்கு முந்தைய விநாயகர் வழிபாட்டிற்குச் சான்றாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 27, 2025

திருமணம் நடக்க இருந்த நிலையில் விபத்தில் 3 பேர் பலி.

image

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். செப். 4 அன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில், திருமண அழைப்பிதழ் கொடுக்கச் சென்ற தாய், தந்தை, மகன் ஆகியோர் விபத்தில் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய த.வெ.க. நிர்வாகியான கார் ஓட்டுநரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

News August 27, 2025

விழுப்புரம்: உங்கள் நிலத்தை கண்டுபுடிக்க இதோ வழி

image

விழுப்புரம் மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க தாத்தா, அப்பா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு, ஆனா நிலம் எங்க இருக்கன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்கனுமான்னு யோசீக்கிறீங்களா?? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. இங்க<> க்ளிக்<<>> பண்ணி LOGIN செய்து விழுப்புரம் மாவட்டம், பத்திர எண், சர்வே எண் மற்றும் சப்டிவிஷன் எண்ணை பதிவிட்டு உங்க இடத்தை பைசா செலவில்லாமல் கண்டுபிடியுங்க.ஷேர்

error: Content is protected !!