News May 17, 2024
மாணவியின் கல்விச் செலவை ஏற்றுக் கொண்ட எல்ஐசி

சமீபத்தில் வெளியான 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 500 க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தார் கமுதி மாணவி காவியா ஜனனி.
அவரின் உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி படிப்புக்கான செலவை, எல்ஐசி ஆஃப் இந்தியா மதுரை கோட்டம் ஏற்றுக் கொண்டுள்ளது. மதுரை எல்ஐசி முதுநிலை கோட்ட மேலாளர், மாணவியை நேரில் சந்தித்து வாழ்த்தினார்.
Similar News
News March 4, 2026
மதுரை: டிபன் கேரியர், ஹாட்பாக்ஸ், சேலை வழங்கிய திமுகவினர்

மதுரை மாநகர், புறநகர் தெற்கு, புறநகர் வடக்கு ஆகிய பகுதிகளில் வாக்காளர்களை குளிர்விக்கும் விதமாக ஹாட் பாக்ஸ், டிபன் கேரியர், சேலை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஒவ்வொரு பகுதியிலும் நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில் திமுகவினர் வழங்கி வருகிறார்கள். இதில் மதுரை கிழக்கு, வடக்கு தொகுதியில் திமுக மகளிர் அணியினர், ஒவ்வொரு பூத்துக்கும் வெல்லும் தமிழ் பெண்கள் என்ற பரப்புரையில் களம் இறங்கி உள்ளனர்.
News March 4, 2026
மதுரை: கம்மியான விலையில் பைக் வேண்டுமா?

மாவட்ட காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு; மதுரை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 26 வாகனங்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.கே.அரவிந்த் தலைமையில், மதுரை ஆயுதப்படை மைதானத்தில் வருகிற 10ம் தேதி பொது ஏலம் நடத்தப்படுகிறது. வாகனங்களை பாா்வையிட்டு முன் பணமாக இரு சக்கர வாகனத்துக்கு ரூ.5 ஆயிரத்தை வருகிற 6, 7 ஆகிய தேதிகளில் செலுத்தி ஏலத்தில் பங்கேற்கலாம். *ஷேர் பண்ணுங்க
News March 4, 2026
மதுரை: பெரியார் பேருந்து நிலையம் அருகே சடலம் மீட்பு

மதுரை டவுன் ரயில் நிலையம் கிழக்கு நுழைவு வாயிலில் உள்ள நகர பேருந்து நிறுத்தம் அருகில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க விலாசம் தெரியாத வாலிபர் நேற்று இறந்து கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய திலகர் திடல் போலீசார் வழக்கு பதிவு செய்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த நபர் குறித்து விசாரணைசெய்து வருகின்றனர்.


