News March 20, 2025

மாணவியிடம் சில்மிஷம், ஆசிரியர் போக்சோவில் கைது

image

கிருஷ்ணகிரி அருகே, தேர்வு எழுத சென்ற பிளஸ் 2 மாணவியிடம், சில்மிஷத்தில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியர், போக்சோவில் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து புகாரின்பேரில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சரவணன் விசாரணை நடத்தினர். அதில், தேர்வு எழுதிய மாணவியிடம் ஆசிரியர் ரமேஷ், பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும், அதே அறையில் மற்றொரு மாணவியிடமும் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும் தெரிந்தது.

Similar News

News August 15, 2025

கிருஷ்ணகிரி: பத்திரம் தொலைந்தால் கவலை வேண்டாம்

image

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே இந்த லிங்க் மூலம் விண்ணப்பித்து பத்திர நகலை பெற முடியும். பத்திரம் மட்டுமல்லாமல் உங்கள் சொத்து பற்றிய பட்டா, வில்லங்க சான்றிதழ் போன்ற விபரங்களையும் <>இதில் <<>>பெற முடியும். மேலும் தகவல்களுக்கு மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை (04343-235233) அழைக்கலாம். *அனைவருக்கும் பகிரவும்*

News August 15, 2025

மதிய உணவு உண்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்

image

ஒசூரை அடுத்த பேரிகை அருகே உள்ள காட்டிநாயக்கன்தொட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இப்பள்ளியில் நேற்று (ஆக.14) பரிமாறிய மதிய உணவில் பல்லி இருந்ததைக் கண்டு மாணவா்கள் அதிா்ச்சியடைந்தனர். அதற்குள், மதிய உணவு உண்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. 20 மாணவர்கள் பேரிக்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News August 15, 2025

கிருஷ்ணகிரியில் இலவச 5G பயிற்சி; ரூ.4.5 லட்சம் வரை சம்பளம்

image

தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் 5G Communication Technology சான்றிதழ் படிப்பை இலவசமாக வழங்குகிறது. 70% நேரடி வகுப்பிலும், 30% ஆன்லைன் வழியாகவும் சுமார் 4000 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியின் மூலம் முன்னணி நிறுவனங்களின் பணி வாய்ப்பை பெறும் இளைஞர்களுக்கு வருடம் ரூ.4.5 லட்சம் சம்பளம் கிடைக்கும். 18 முதல் 35 வயது உடையவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!